புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2015

20 இன்றும் நாளையும் ஒத்திவைப்பு விவாதம் ஆட்சேபனை தெரிவிக்க எதிர்க்கட்சி தீர்மானம்


20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து இன்றும் நாளையும் ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்த நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் மறுசீரமைப்பு குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட முன்னர் அது குறித்து ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்துவதற்கு
எதிர்தரப்பு ஆட்சேபனை தெரிவித்துள்ள போதும் இறுதியில் இரு நாள் விவாதம் நடத்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், இன்று பிற்பகல் 2.00 மணி முதல் 6.30 மணி வரையும் நாளை காலை 10.30 முதல் 6.30 மணி வரையும் விவாதம் நடத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆளும் தரப்பின் வேண்டுகோளுக்கு ஏற்ப விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியின் தலைமையில் நேற்று காலை 11.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத்தில் கூடியது.
இன்றும் நாளையும் விவாதம் நடத்துவதற்கு ஏற்கெனவே திட்டமிட்டிருந்த விடயங்களை தவிர்த்து 20 ஆவது விவாதம் குறித்து ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்த இருப்பதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இங்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. 20 ஆவது திருத்தம் அமைச்சரவையில் அனும திக்கப்பட்டு வர்த்தமானியில் வெளி யிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட இருக்கும் நிலையில் இவ் வாறு ஒத்திவைப்பு பிரேரணை நடத்துவது சட்ட விரோதம் என எதிர்தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்து ள்ளனர்.
இது குறித்து நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த ஊடகவி யலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா,
சிறு கட்சிகளின் கருத்துக்களையும் ஏனைய கட்சிகளின் நிலைப்பாடுகளையும் முன்வைப்பதற்கு அவகாசம் வழங்குவதற்காக 20 ஆவது திருத்தம் குறித்து ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்துவதாக அரசாங்கம் தெரிவித்தது.
ஆனால், 20 ஆவது திருத்தம் வர்த்த மானியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை 27 ஆம் திகதியே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும். அன்று விடுமுறை நாள் என்பதால் 29 ஆம் திகதியே அது சாத்தியமாகும்.
இது ஒரு வாரம் ஒழுங்குப் பத்திரத்தில் இருக்கும் காலத்தில் மக்களுக்கு அதற்கு எதிராக வழக்கு தொடர கால அவகாசம் கிடைக்கும். உச்ச நீதிமன்ற வியாக்கியானம் கிடைக்க 3 வாரம் வரை செல்லும் குழு நிலையிலே 20 ஆவது திருத்தங்களை முன்வைக்க முடியும். 20 ஆவது திருத்தம் பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கும் நிலையில் அதற்கு முன்னர் தேர்தல் திருத் தம் குறித்து விவாதம் நடத்துவது உகந்த தல்ல. 20 ஆவது திருத்தத்தை தாமதப்படுத் தவே அரசாங்கம் இவ்வாறு செய்கிறது.
எனவே, எமது ஆட்சேபனையை இன்று சபாநாயகரிடம் முன் வைக்க இருக்கி றோம். நாம் விவாதத்தை பகிஷ்கரிக்க மாட்டோம். இந்த விவாதத்தில் 20 ஆவது திருத்தத்தை தோற்கடிக்கும் ஐ.தே.க. வினதும் ஜே.வி.பி.யினதும் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்து வோம்.
அமைச்சரவையில் 20 ஆவது திருத்தத் திற்கு அனுமதி வழங்கிய பிரதமர் வெளியில் வந்து அதனை தோற்கடிப்பதாக கூறியுள்ளார்.
அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதால் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது சகல அமைச்சர்களினதும் கடப்பாடாகும். வெளியில் வந்து 20 ஆவது திருத்தத்தை எதிர்க்கும் அமைச்சர் ஹக்கீம் பதவி விலக வேண்டும் பிரதமர் தேர்தல் மறுசீரமைப்பை பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற முயல்கிறார்.
20 ஆவது திருத்தம் அரசாங்கத்தின் யோசனையாகும். அரசாங்கமே அதனை வர்த்தமானியில் வெளியிட்டது. ஆனால், தற்பொழுது இரட்டை வேடம் போடுகிறது. 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றும் நிபந்தனைக்குட்பட்டே 19 ஐ ஆதரித்தோம். 20 ஆவதை தோற்கடிப்பதென்பது அரசாங்கத்தின் இயலாமையையே இது காட்டுகிறது என்றார்.
சுசில் பிரேம் ஜெயந்த்
20 ஆவது திருத்தத்தை திருத்தங்களுடன் நிறைவேற்ற ஐ.ம.சு.மு. ஆதரவு வழங்கும். 20 ஆவது திருத்தத்தை வலியுறுத்தியவர்களே இன்று அதனை எதிர்க்கின்றனர். 255 உறுப்பினர் திட்டத்திற்கு சிறு கட்சிகளும் ஆதரித்தன. ஆனால் ஐ.தே.க. முன்வைத்த 225 உறுப்பினர் முறை யதார்த்தமானதல்ல. 237 பேரை தெரியும் முறைக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் அதற்கு மாற்று யோசனை முன்வைக்கவில்லை.

ad

ad