புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2015

வடமாகாண சபை உறுப்பினர்களின் கதவடைப்பு போராட்டம் முடிவு! சபை ஒத்திவைப்பு






வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றம் செய்யப்படாமைக்கு கண்டனம் தெரிவித்து வடமாகாண சபையில் உறுப்பினர்கள் சபா மண்டபத்தை மூடி மாகாணசபை உறுப்பினர்கள் மேற்கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மாகாணசபை அமர்வுகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது
மாகாண சபையின் 31 வது அமர்வு இன்றைய தினம் நடைபெறவிருந்த நிலையில் மாகாணசபை உறுப்பினரை அவமரியாதை செய்த அரசாங்க அதிபர் இடமாற்றம் செய்யப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலை 9 மணியளவில் சபா மண்டபத்திற்கு முன்பாக கூடிய மாகாணசபை ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபை அமர்வுகளை நடத்த விடாமல் தடுத்தனர்.

இந்நிலையில் நீண்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் கட்சி தலைவர்களுடனான தொலைபேசி உரையாடலின் பின்னர் காலை 11.30 மணியளவில் சபையை கூடி பின்னர் குறித்த அரசாங்க அதிபர் இடமாற்றம் தொடர்பான பேச்சுக்களை பதிவு செய்த பின்னர் சபை ஒத்திவைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபையில் தற்போது கருத்து பதிவு இடம்பெறுவதுடன் சபை ஒத்திவைக்கப்படவுள்ளது.
வவுனியா அரச அதிபரை மாற்ற நடவடிக்கை இல்லை! வடமாகாண சபை உறுப்பினர்கள் போராட்டம்!
வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதனிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றப்படாமையினை கண்டித்து, இன்றைய தினம் மாகாண சபை உறுப்பினர்கள் சபா மண்டபத்தின் பிரதான வாயிலை மூடி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பாக பல தடவைகள் முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபையில் சுட்டிக்காட்டியபோதும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமையினை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்றைய தினம் நடைபெறவிருந்த மாகாணசபை அமர்வு தாமதமாகியுள்ள நிலையில் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ad

ad