புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2019

டோனியின் அனுபவமா? ரோஹித்தின் அதிரடியா? நான்காவது முறை மகுடம் சூடப் போவது யார்?

கிரிக்கெட் இரசிகர்களை விறுவிறுப்பின் உச்சத்திற்கு அழைத்துச் சென்ற, ஐ.பி.எல். ரி-20 தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

ஆம்! உலக கிரிக்கெட் இரசிகர்களே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 12ஆவது அத்தியாயத்தின் இறுதிப் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், நடப்பு சம்பியனும் மூன்று முறை கிண்ணமேந்திய அணியுமான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், மூன்று முறை சம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இப்போட்டியை பொறுத்தவரை கடந்த கால பெறுபேறுகளை மதீப்பிட்டு பார்த்தால், நடப்பு தொடரில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதிக்கொண்ட மூன்று போட்டிகளிலுமே, மும்பை இந்தியன்ஸ் அணியே வெற்றிபெற்றுள்ளது.

ஆனால் இந்த வெற்றிகளை மட்டும் கருத்திற் கொண்டு இறுதிப் போட்டியில் சாதிப்பது யார் என்பதை இலகுவாக கணித்துவிட முடியாது. காரணம் சென்னை அணி எந்த நேரத்திலும் அதிர்ச்சி கொடுக்க கூடிய அணி.

டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் தலைமையிலான டோனி படையில், ஷேன் வொட்சன், டு பிளெஸிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, பிராவோ, ஜடேஜா, இம்ரான் தஹீர், ஹர்பஜன் சிங், மிட்செல் சான்ட்னர் போன்ற சிறப்பான வீரர்கள் உள்ளனர்.

இதேபோல, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி படையில், குயிண்டன் டி கொக், பொலார்ட், சூர்ய குமார் யாதவ், இசான் கிசான், எவீன் லீவிஸ், ஹர்திக் பாண்ட்யா, குர்னல் பாண்ட்யா, மாலிங்க, பும்ரா, மெக்லினகன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

ஆகையால் பலம் பொருந்திய இவ் இரு அணிகளின் மோதலும், இரசிகர்களை கொண்டாட வைக்கவுள்ளது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இதுவரை சென்னை அணி 7 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதில் மூன்று முறை சம்பியன் பட்டம் வென்றுள்ளது. 4 முறை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மறுபுறம் மும்பை அணி, 4 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதில் மூன்று முறை சம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஒரு முறை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

அத்தோடு, இரு அணிகளும் இதற்கு முன்னர் மூன்று முறை மோதியுள்ளன. ஐ.பி.எல். ரி-20 தொடரின் இறுதிப் போட்டியில், 2010ஆம் ஆண்டு சென்னை அணியும் மும்பை அணியும் மோதிக்கொண்ட போட்டியில், சென்னை அணி 22 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதனையடுத்து, 2013ஆம் ஆண்டு சென்னை அணியும் மும்பை அணியும் மோதிக்கொண்ட போட்டியில், மும்பை அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

2015ஆம் ஆண்டு இரு அணிகளும் மோதிக்கொண்ட போட்டியில், மும்பை அணி 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

ஆகவே டோனி தலைமையிலான சென்னை அணி, மும்பை அணியுடனான மோதலில் வெற்றிபெற்று நான்காவது முறை மகுடம் சூடுமா அல்லது ரோஹித் சர்மா தலைமையிலான அணி வெற்றிபெற்று நான்காவது முறை மகுடம் சூடுமா என பொறுத்திருந்து பார்ப்போம்

ad

ad