புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2020

கொரோனா இலங்கைக்கு வரவில்லை:தயார் நிலையில்

கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்கேதத்தின் பேரில் இவர்கள் நால்வரும் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.


இதனிடையே சீனாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் 24 மணித்தியாலமும் இயங்க கூடிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய 0086-10-65321861 மற்றும் 0086-10-65321862 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தகவல்களை தெரிவிக்க முடியும்.

சீனாவில் 860 இலங்கை மாணவர்கள் தங்கியுள்ளதாகவும் அவர்களில் ஒருவரேனும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி இலங்கை வெளிவிவகா அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்னொருபுறம் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய, தேசிய செயற்பாட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.


இந்த செயற்பாட்டுக் குழு இன்று (27) மாலை 5.00 மணிக்கு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் கூடவுள்ளது.

இந்த தேசிய செயற்பாட்டுக்குழு ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, சுகாதார அமைச்சின் செயலாளர் ஹந்துனி ஜயரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்ஹ, மேலதிக செயலாளர்களான சுனில் டி அல்விஸ், லக்ஷ்மி சோமதுங்க, நிஹால் ஜயதிலக, விசேட வைத்தியர் அனுருத்த பாதெனிய ஆகியோரை உள்ளக்கிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ad

ad