புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2012

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நேவால் வெண்கல பதக்கம் வென்று முத்திரை பதித்தார். 
வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் சாய்னா நேவால் சீன வீராங்கனை வாங் ஜின்னை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை சாய்னா 18-21 என்ற கணக்கில் இழந்தார்.
2-வது செட்டில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தபோது வாங் ஜின் தசைப்பிடிப்பால் போட்டியில் இருந்து வெளியேறினார். அதனால் சாய்னாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. 

லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற 3-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே துப்பாக்கி சுடுதலில் ககன்நரங் வெண்கல பதக்கமும் (10 மீட்டர் ஏர் ரைபிள்), விஜய்குமார் வெள்ளிப்பதக்கமும் (25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல்) பெற்றனர். ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் இந்தியா முதல் முறையாக பதக்கம் பெற்றுள்ளது. அந்த வரலாற்று பெருமை சாய்னாவை சேரும். 

மேலும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 2-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார். இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் பளுதூக்கும் வீராங்கனை மல்லேஸ்வரி வெண்கல பதக்கம் பெற்று இருந்தார். 

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதன் மூலம் தனது கனவு நனவாகி உள்ளது. பதக்கம் பெற்றதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளேன் என்று சாய்னா கூறியுள்ளார். 

பேட்மிண்டனில் வெண்கல பதக்கம் வென்று பெருமை சேர்ந்த சாய்னாவுக்கு பாராட்டு குவிக்கிறது. சாய்னாவால் நாடே பெருமை அடைந்துள்ளது என்று பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளார். 

நட்சத்திர கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் கூறும்போது, சாய்னாவின் ஆட்டம் லண்டன் ஒலிம்பிக்கில் மெய்சிலிர்க்க வைத்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 2-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் பதக்கம் வெல்ல உதவியாக இருந்த பயிற்சியாளர் சோபிசந்தையும் பாராட்டுகிறேன் என்றார். 

இதேபோல யுவராஜ்சிங்கும் பாராட்டு தெரிவித்து உள்ளார். 

வெண்கல பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ந்த சாய்னாவுக்கு ரூ.1 கோடி ரொக்க பரிசு வழங்கப்படும் என்று அரியானா முதல்-மந்திரி பூபிந்தர்சிங் ஷூடோ அறிவித்து உள்ளார். சாய்னா ஐதராபாத்தில் இருந்தாலும், அரியானாவில் பிறந்தவர் என்ற முறையில் அம்மாநில அரசு ரூ.1 கோடி பரிசை அறிவித்து உள்ளார்.

ad

ad