புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2012

ஒலிம்பிக் வட்டு எறிதல்: இந்திய வீரர் முதலிடம் பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி
லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தடகளப்போட்டியில் வட்டு எறிதல் போட்டிக்கான தகுதிச் சுற்று இன்று நடைபெற்றது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் வட்டு எறிதலில் இந்திய வீரர் விகாஸ் கவுடா முதலிடம் பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதில் இந்திய வீரர் விகாஸ் கவுடா உட்பட 41 வீரர்கள் கலந்து கொண்டனர். 41 வீரர்களும் 'ஏ', 'பி' என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.
'ஏ' பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய வீரர் விகாஸ் 65.20 மீற்றர் வட்டு எறிந்து முதலிடம் பெற்றார். அவருடன் முதல் 6 இடங்களை பெற்ற மற்ற நாட்டு வீரர்களும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
'பி' பிரிவில் எஸ்டோனியா வீரர் ஜெர்ட் கன்டர் 66.39 மீற்றர் வட்டு எறிந்து முதலிடம் பெற்றார். மேலும் இரண்டு முதல் 6 இடங்களை பெற்ற மற்ற வீரர்களும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
அதேபோல மகளிர் வட்டு எறிதலில் இந்தியாவின் கிருஷ்ன பூனியாவும் முதன் முறையாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad