புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2012


அயர்லாந்து மேற்கிந்திய போட்டி மழையால் பாதிப்பு: சுப்பர்8 சுற்றுக்குள் நுழைந்தது மேற்கிந்திய அணி
 




மேற்கிந்திய தீவுகள் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மழை காரணமாக முடிவு எட்டப்படாது கைவிடப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட தனது குழுவில் ஓட்ட சராசரி விகிதத்தில் அயர்லாந்தை விட முன்னிலை பெற்ற மேற்கிந்திய தீவுகள்
அணி சுப்பர்8 சுற்றுக்குள் நுழைந்தது.

ஐ.சி.சி.யின் இருபது-20 தொடரின் 11ஆவது லீக் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அயர்லாந்து ஆகிய அணிகள் மோதின.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் அயர்லாந்து அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.
அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ஸடிரிலிங்கோடு களமிறங்கிய பொட்ர்பீல்ட் முதலாவது ஓவரின் முதல் பந்து வீச்சிலேயே போல்டாகி அரங்கு திரும்பினார்.

இதனையடுத்து ஸ்டிரிலிங்கோடு இணைந்துக்கொண்ட ஜொய்சி சிறந்த இணைப்பினை அமைத்து 33 ஓட்டங்களை பகிர்ந்து கொண்ட வேளையில் மழை குறுக்கிட்டது.

பின்னர் சிறுது நேரம் தாமதமாகி 19 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு போட்டி ஆரம்பமாக இரண்டாவது விக்கெட்டும் மேற்கிந்திய தீவுகளால் பறிக்கப்பட்டது.

17 ஓட்டங்களை பெற்றிருந்த ஜொய்சி சுனில் நரேனின் பந்தில் போல்டாகி அரங்கு திரும்பினார். இதனையடுத்து நில் ஓ பிரையன் களமிற மறுமுனையில் ஆரம்ப வீரராக 19 ஓட்டங்களை பெற்றிருந்த ஸ்ரேலிங் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து ஹெரி பில்சன் (21), நில் ஓ பிரையன் (25), கெவின் ஓ பிரையன் (13) ஆகியோர் வலுச் சேர்க்க நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பந்து வீச்சி மேற்கிந்திய அணி சார்பாக கெயில் இரு விக்கெட்டுகளையும் எட்வட், ராம்போல், சமி, நரேயன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து மீண்டும் குறுக்கிட்ட மழை தொடர்ந்து பெய்தமையால் போட்டி முடிவு எட்டப்படாது கைவிடப்பட்டது.

ad

ad