புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2012


புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் முதலிடம்!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். இந்து கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
இணையத்தளத்தில் வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்று முடிவுகளின் படி யாழ் மாவட்டத்தில் இம்மாணவன் 193 புள்ளிகளைப்பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
அத்துடன் யாழ். இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த கலைச்செல்வன் கீர்த்திகன் 191 புள்ளிகளையும், ஸ்ரீகந்தராசா ஆரணி 190 புள்ளிகளையும் பெற்றுள்ளனர் என்று பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இம்முறை யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் இருந்து பரீட்சைக்கு 309 மாணவர்கள் தோற்றியுள்ளனர். இதில் 143 பேர் சித்தியடைந்துள்ளனர் என பாடசாலை சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு:
2012ஆண்டு தரம் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றிய திருக்கோவில் ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலை மாணவி கே. வைசாலி 187 புள்ளியைபெற்று சித்தியடைந்து அம்பாறை மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
இவர் அக்கரைப்பற்று 7ம் பிரிவு, நெசவு நிலைய முன் வீதியைச் சோர்ந்த கட்டடக் கலைஞரான கனகசபேசன், ஆசிரியை யோகேஸ் தம்பதிகளின் புதல்வியாகும்.
இதேவேளை, இப் பாடசாலையில் தரம் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் 23 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் எம்.கிருபைராஜா தெரிவித்தார்.

ad

ad