புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2012


வெள்ளவத்தையில் நடத்தப்பட்டு வந்த விபசாரவிடுதிக்கும் மேர்வின் சில்வாவுக்கும் தொடர்பு

அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்பாளரால் வெள்ளவத்தையில் நடத்தப்பட்டு வந்திருக்கின்ற விபச்சார விடுதியே ஊழல்கள் மற்றும் இலஞ்சங்கள் ஆகியவற்றுக்கு எதிரான விசேட பொலிஸ் குழுவால் கடந்த
வாரங்களில் நடத்தப்பட்ட முற்றுகையில் மாட்டிக் கொண்டது.

அடிதடி வழக்கில் மாலக சில்வா பொலிஸில் சரண் அடைந்த அதே தினத்தில்தான் இம்முற்றுகை நடத்தப்பட்டு உள்ளது.  பாணந்துறை வலப்பனவில் இருந்து வந்து முற்றுகையை நடத்தி இருக்கின்றார்கள்.
காலி வீதியில் 577 ஆம் இலக்க முகவரி கொண்ட இரு மாடிக் கட்டிடம்தான் விபச்சார விடுதி நடத்தப்பட்டு வந்திருக்கின்ற இடம். கீழ்ப் பகுதியில் ஜிம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. மேல் பகுதியில் மசாஜ் 

கிளினிக் நடத்தப்பட்டு வந்திருக்கின்றது. அத்துடன் மேற்பகுதியில் உள்ள அறைகளில்தான் விபச்சாரம் நடத்தப்பட்டு வந்திருக்கின்றது.
சம்பவ தினம் பொலிஸ் அலுவலர் ஒருவர் சாதாரண பொதுமகன் போல வேடம் போட்டு, வாடிக்கையாளர் போல சென்று முற்றுகையை முன்னெடுத்து இருக்கின்றார்.
விபச்சார விடுதிக்குள் நுழைகின்றமைக்கான கட்டணம் 1000 ரூபாய் என்றும் விலை மாதரை அனுபவிக்கின்றமைக்கான கட்டணம் குறைந்தது 6000 ரூபாய் என்றும் தெரிகின்றது.
முற்றுகை இடம்பெற்ற நேரத்தில் ஐந்து விபச்சாரிகள் பிடிபட்டு உள்ளார்கள். இவர்களில் ஒருவர் கர்ப்பிணி. இவர்கள் 21 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
மனேஜரும், உதவியாளர்கள் இருவரும் இங்கு கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.
விபச்சார விடுதியின் உரிமையாளரான இணைப்பாளர் அந்நேரம் விடுதியில் இருந்திருக்கவில்லை. அத்துடன் முற்றுகை விபரங்களை அறிந்து கொண்ட பின் வீட்டில் இருந்து இவர் தலைமறைவாகி விட்டார் என்றும் செய்திகள் கசிந்து உள்ளன.
மசாஜ் நிலையத்தில் எண்ணெய் உட்பட ஆயுர்வேத பொருட்கள் எவையும் இருந்திருக்கவில்லை என்று பொலிஸார் வெளிப்படுத்தி உள்ளார்கள்.
அரசியல்வாதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரின் உதவி, ஒத்தாசை ஆகியவற்றுடன் கடந்த 16 வருடங்களாக இவ்விபச்சார விடுதி நடத்தப்பட்டு வந்திருக்கின்றது.
முற்றுகையில் கைது செய்யப்பட்டவர்களை விளக்கமறியலில் போட கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் போட உத்தரவிட்டு உள்ளது.
அமைச்சரின் இணைப்பாளரை கண்டுபிடிக்கின்றமைக்கான தீவிர தேடுதல் வேட்டையை பொலிஸார் முடுக்கி விட்டு உள்ளார்கள்.

ad

ad