புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2012


நடப்புச் சம்பியனை வீழ்த்திய இந்தியா 90 ஓட்டங்களால் அபார வெற்றி
இந்திய அணி நிர்ணயித்த 171 என்ற ஓட்ட இலக்கை அடைய முடியாத நடப்புச் சம்பியனான இங்கிலாந்து அணியை இந்திய அணி 90 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.
 


இருபது-20 உலகக் கிண்ண தொடரில் ஏ பிரிவில் இன்று இடம்பெற்ற லீக் போட்டியில் முன்னாள் சம்பியன் இந்தியாவும், நடப்புச் சம்பியன் அணி இங்கிலாந்தும் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.


இரு அணிகளும் தங்கள் பிரிவில் அங்கம் வகித்த கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானை வீழ்த்தி சுப்பர்-8 சுற்று வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்து விட்டன. இந்நிலையில் அடுத்த சுற்றுக்குள் முழு உத்வேகத்துடன் நுழைவதற்கு இந்த போட்டி முக்கியமாக காணப்பட்டது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடியே வென்றதால் அணித் தலைவர் டோனி அதிருப்தி அடைந்தார். இருப்பினும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் இந்திய அணியில் இன்றைய போட்டியில் சில மாற்றங்களை செய்திருந்தது.

அடுத்த சுற்றுக்கு முன்பாக அணியிலுள்ள பெரும்பாலான வீரர்கள் குறைந்தது ஒரு ஆட்டத்திலாவது வாய்ப்புப்பெற வேண்டும் என டோனி கூறியிருந்தார். இதன்படி கடந்த ஆட்டத்தில் வெளியிலிருந்த அசோக் டிண்டா, ஹர்பஜன் சிங், பாலாஜி, பியுஸ் சாவ்லா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

ஆனால் குறித்த வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக்கொண்டனர். அதாவது இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கதிகலங்கியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 170 ஓட்டங்களை பெற்றது. இப்போட்டியில் செவாக்குக்கு ஓய்வளிக்கப்பட்டமையினால் ஆரம்ப வீரர்களாக கம்பீர் மற்றும் இர்பான் பதான் ஆகியோர் களம்கண்டனர்.

இந்திய அணி 24 ஓட்டங்களை பெற்றிருந்த போது பதான் 8 ஓட்டங்களுடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய கோலி கம்பிருடன் இணைச் சேர்ந்தார். இருவரும் அபாரமாக துடுப்பெடுத்தாடி இரண்டாவது விக்கெட்டுக்காக 57 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது கோலி 45 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.

இதன்பின்னர் சிறிது நேரத்தில் கம்பிரும் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க ரோஹித் சர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை வலுப்படுத்தினார்.

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் ஸ்டீவன் பின் இரு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து 171 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர் கீஸ்வெஸ்டர் மாத்திரம் 35 ஓட்டங்களை பெற ஏனைய வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுடன் வந்த வேகத்தில் அரங்கு திரும்பினர்.

இதனால் இங்கிலாந்து அணி 14.4 ஓவர்களில் 80 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

பந்து வீச்சில் அசத்திய இந்திய அணியின் ஹர்பஜன் சிங் 4 விக்கெட்டுக்களையும், பதான் மற்றும் சவ்லா ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்திய அணியில் துடுப்பாட்டம் மாத்திரமே உள்ளது ஆனால் பந்து வீச்சு மிக மோசமாக உள்ளது என அனைவராலும் விமர்சிக்கப்பட்டு வந்தது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 23 ஓட்ட வித்தியாசத்தில் போராடியே வென்றது. இதனால் இந்திய அணியின் பந்து வீச்சு தான் தொடர்ந்து கவலைக்குரிய விடயமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இன்றைய போட்டி ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது. காரணம் நடப்பு சம்பியனான இங்கிலாந்தை இந்தியா பந்து வீச்சால் சுருட்டியுள்ளது.

எனவே இன்றைய போட்டியில் சவ்லா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டனர். இதனால் இனிவரும் போட்டிகளில் இவர்களுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

போட்டியின் ஆட்டநாயகனாக பந்து வீச்சில் அசத்திய ஹர்பஜன் சிங் தெரிவுசெய்யப்பட்டார்.


ad

ad