புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2012


மழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2.50 லட்சம்: ஜெ. அறிவிப்பு
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை  இரண்டு தினங்களுக்கு முன் தொடங்கி, பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக 17.10.2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், பிச்சையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மூக்கையா என்பவரின் மகன் செல்வம்;

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கனையார் கிராமத்தை
ச் சேர்ந்த எம்.ஜி.ஆர். என்பவரின் மனைவி அன்னக்கொடி, தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடராம் வட்டம், ஜெகவீரபாண்டியாபுரம் கிராமம், மேலசெய்த்தலையைச் சேர்ந்த மகராஜன் என்பவரின் மனைவி மகராசி அம்மாள், மாடசாமி என்பவரின் மனைவி அழகம்மாள் சோலையப்பன் என்பவரின் மனைவி சுப்பம்மாள், நாகைய்யா என்பவரின் மனைவி ஆதிலெட்சுமி;
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், காந்தலூர் கிராமத்தைச் சேர்ந்த சாமியய்யா என்பவரின்  மகள் கோவிந்தம்மாள்; திருநெல்வேலி மாவட்டம், பாலமடை கிராமத்தைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மகன் முருகன், சிவகிரி வட்டம், புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த  வேலு என்பவரின் மகன் மாரியப்பன்; மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், கல்லணை கிராமத்தைச் சேர்ந்த பழனியாண்டி என்பவரின் மனைவி பழனியம்மாள் ஆகியோர் இடி, மின்னல் தாக்கியதால் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; 

18.10.2012 அன்று விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம், நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்த பெத்தான் என்பவரின் மகன் கோவிந்தன்; திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், தோலி கிராமத்தைச் சேர்ந்த காத்தான் என்பவரின் மகன் மகாலிங்கம், திரு. குப்பு என்பவரின் மகன் அய்யாக்கண்ணு;
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராம் என்பவரின் மகன் கண்ணன் மற்றும் வேல்முருகன் என்பவரின் மனைவி தங்கமுனீஸ்வரி, அனுப்பம்குளம் கிராமத்தைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரின் மகன் காளீஸ்வரன்;

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், சௌந்தரபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெனிஸ்ட்டர் என்பவரின் மகன் அலெக்ஸ் ஆகியோர் இடி, மின்னல் தாக்கியதால் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;
18.10.2012 அன்று சென்னை, பெரம்பூர் வட்டம், அயனாவரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் ரமேஷ்  மற்றும் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் மணி என்கிற மணிகண்டன்; 19.10.2012 அன்று கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல் குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சேகர் ஆகியோர்  மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து  நான் மிகவும் துயரம் அடைந்தேன். 

தமிழகத்தில் பெய்த கடும் மழையின் காரணமாக  பல்வேறு நிகழ்வுகளால் மரணமடைந்த இந்த இருபது நபர்களின் குடும்பங்களுக்கு  எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் உதவித் தொகையை உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

ad

ad