புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2012


யாழிலிருந்து கண்டிக்கு பயணித்த பஸ்ஸிலிருந்து கை துப்பாக்கிகள் மீட்பு!
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நான்கு இளைஞர்கள் உட்பட வாகன சாரதி மற்றும் நடத்துனர்களும் ஓமந்தை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து கை துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் என பெருமளவில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பேருந்து பிற்பகல் ஒரு மணியளவில் யாழ்.நகரிலிருந்து புறப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் இடைநடுவில் ஏறிய தலைக்கவசம் அணிந்த நபர் ஒருவர் குறித்த பையினை பயணிகள் ஆசனமொன்றின் கீழ்  வைத்துள்ளார்.
குறித்த பஸ் ஓமந்தை சோதனை சாவடியினில் நிறுத்தப்பட்ட வேளையில் படையினரது சோதனையின் போது குறித்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தது.
பஸ்ஸினுள் இருந்த அனைவரும் அவசரமாக ஓமந்தை பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு தடுத்த வைக்கப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டனர்.
குறித்த பஸ்ஸினில் பயணித்த படையினர் வெளியேற அனுமதிக்கப்பட்ட போதும் பொதுமக்கள் சுமார் எட்டு மணி நேரம் வரையில் மூடப்பட்ட பஸ்ஸினுள் தடுத்து வைக்கப்பட்டு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தமையினால் விடுவிக்கப்பட்டனர்.

எனினும் கைது செய்யப்பட்ட குறித்த நான்கு வன்னியை சேர்ந்த இளைஞர்களும் மன்னாரில் நடைபெறவிருந்த விளையாட்டுப் போட்டியொன்றிற்காக பயணித்த அப்பாவிகளென கூடப் பயணித்த பொதுமக்கள தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஆயுதங்களுள் கைத்துப்பாக்கிகள் மற்றும் பெருமளவிலான ரவைகள் மறறும் கைக்குண்டு என்பவை இருந்ததாகவும் அவை படையினராலேயே கடத்தப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது.

ad

ad