புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2012

உயிர்நீத்த தனது அண்ணனை நினைத்து சகோதரர், மகளை நினைத்து தாய், கணவனை நினைத்து மனைவி விளக்கேற்றுவது தவறா என கேள்வி எழுப்பிய சம்பந்தன் 

வடக்கில் ஒரு சிவிலியனுக்கு மூன்று இராணுவ சிப்பாய் என்ற வீதம் 1 லட்சத்து 50 ஆயிரம் இராணுவ சிப்பாய்கள் நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் 20 இராணுவப் பிரிவுகள் இருப்பதாகவும் அதில் 15 இராணுவப் பிரிவுகள் வடக்கிலும் 2 இராணுவ பிரிவுகள் கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் 3 இராணுவப் பிரிவினரும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினல் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

2013 வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் பாதுகாப்பு அமைச்சு தொடர்பில் இன்று (07) பாராளுமன்றில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும் என தமிழ் மக்கள் கோரவில்லை எனவும் தாங்கள் தங்கள் மண்ணில் சுதந்திரமாக, உரிமைகளுடன் வாழ வழியேற்படுத்திக் கொடுக்குமாறுமே கோருவதாகவும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவம் அப்பகுதிகளில் தேர்தல் இடம்பெற்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களை மிரட்டியதாக சம்பந்தன் குறிப்பிட்டார்.

அத்துடன், வலிகாமம், சம்பூர் மற்றும் கோப்பாபிளவு ஆகிய பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றப்படவில்லை எனவும் வடக்கில் படையினர் அதிகளவு கஜு பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருவதாகவும் சம்பந்தன் குற்றம் சுமத்தினார்.

செப்டெம்பர் 27ம் திகதி தமிழர்கள் தங்களுடைய முருகக் கடவுளை வணங்கும் கார்த்திகை தினம் எனவும் அன்றைய தினமே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவதாகவும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

ஆனால் தங்களுடைய முருகக் கடவுளை நினைத்து விளக்கேற்றவும் உயிர்நீத்த தங்கள் உறவுகளை நினைத்து விளக்கேற்றவும் அந்த மக்களுக்கு உரிமை இல்லையா என சம்பந்தன் கேள்வி எழுப்பினார்.

உயிர்நீத்த தனது அண்ணனை நினைத்து சகோதரர், மகளை நினைத்து தாய், கணவனை நினைத்து மனைவி விளக்கேற்றுவது தவறா என கேள்வி எழுப்பிய சம்பந்தன், விளக்கேற்றுவது அம்மக்களின் அடிப்படை உரிமை எனவும் கொழும்பில் ஜேவிபி கார்த்திகை வீரர்கள் நினைவு அனுஷ்டிப்படை யாரும் எதிர்ப்பதில்லை எனவும் ஆர்.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

யாழ். பல்கலைக்கழகத்திற்குள் அனுமதி இன்றி இராணுவத்தினர் பிரவேசித்தது தவறு எனக்கூறிய அவர், மாணவர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டமையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆர்.சம்பந்தன் கேட்டுக் கொண்டார்.

ad

ad