புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2012

 3-ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 509 ரன்கள் எடுத்தது. பிரையர்
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 316 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. 

அடுத்து முதல் இன்னிங்ஸ் விளையாடத் தொடங்கிய இங்கிலாந்து 2-ம் நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் மட்டும் இழந்து 216 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் கூக் அபாரமான தொடக்கத்தை கொடுத்து சதம் அடித்தார். அவர் 136 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவருடன் டிராட் 21 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டு இருந்தார். இந்திய அணியில் ஒஜா மட்டும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். 

இன்று 3-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. கூக், டிராட் ஆகியோர் தொடர்ந்து களம் இறங்கி ஆடினார்கள். இவர்களது நிதானமான ஆட்டத்தில் இங்கிலாந்து தொடர்ந்து ரன்களை குவித்தது. இந்த ஜோடியை பிரிக்க இந்திய வீரர்கள் அஸ்வின், ஜாகீர்கான், இஷாந்த் சர்மா ஆகியோர் மாறி மாறி பந்து வீசினார்கள். என்றாலும் கூக்- டிராட் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. 

தேநீர் இடைவேளையின் போது கூக் 151 ரன்களும், டிராட் அரை சதத்தை தாண்டி 53 ரன்களும் எடுத்தனர். அப்போது இங்கிலாந்தின் ஸ்கோர் 1 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்திருந்தது. தேநீர் இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்டுகளை விழ்த்த முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறி வந்தனர். ஸ்கோர் 338 ரன்னாக இருந்த போது சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட டிராட் 87 ரன்னில் ஒஜா பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 

அவருக்கு பதில் பீட்டரசன், கூக்குடன் ஜோடி சேர்ந்து ஆடினார். கூக் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட் நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அவர் 190 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த பெல், பீட்டர்சனுடன் ஜோடி சேர்ந்தார். பெல் 5 ரன் எடுத்த நிலையில் ஷர்மா பந்தில் அவுட் ஆனார்.
 
அடுத்தாக வந்த பட்டேல் பீட்டர்சனுடன் ஜோடி சேர்ந்தார். பீட்டர்சன் பொறுப்புடன் விளையாடி 54 ரன் எடுத்தார். அதன் பின் அஸ்வின் பந்தில் எல்பிடபியூ ஆனார். அடுத்த வந்த பிரையர் பட்டேலுடன் இணைந்து விளையாடினார். 33 ரன் எடுத்த பட்டேல் ஓஜா பந்தில் ஷேவாகிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
 
அடுத்து பிரையரும் ஸ்வானும் ஜோடி சேர்ந்து அணியின் ரன்னை உயர்த்தி வருகின்றனர். 3-ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 509 ரன்கள் எடுத்தது. பிரையர் 40 ரன்னும், ஸ்வான் 21 ரன்னும் எடுத்து இருந்தனர்.

ad

ad