புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2012

கலைஞருக்கு நன்றி! தே.மு.தி.க., மாநில துணை செயலாளர் ஏ.ஆர் இளங்கோவன்!
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த தே.மு.தி.க., பொதுக்கூட்டத்தில் முதல்வர் குறித்து அவதூறு பேசியதாகவும், சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் கெங்கவள்ளி தொகுதி எம்.எல்.ஏ., சுபா, சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., மோகன் ராஜ்
, மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ., பார்த்திபன் உட்பட 125 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பார்த்திபன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆத்தூர் கோர்ட் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் எம்.எல்.ஏ.,க்கள் சுபா, மோகன்ராஜ், தே.மு.தி.க., மாநில துணை செயலாளர் ஏ ஆர் இளங்கோவன் ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதனையடுத்து மூன்று பேரும் ஆத்தூர் கோர்ட்டில் சரணடைந்து ஜாமின் பெற்றனர்.


இதன் பின்னர் கோர்ட் வாயிலில் துணை செயலாளர் இளங்கோவன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில், தே.மு.தி.க., எம். எல்.ஏ.,க்கள் மீது பொய் வழக்கு போட்டதற்கு முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான கலைஞர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என கூறினார்.

ad

ad