புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2012


சீரற்ற காலநிலை : புத்தளம் மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இடம்பெயர்வு

தற்போது நாட்டிலேற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தையடுத்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் புத்தளம் மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் கேர்ணல் ரணவீர தெரிவித்தார்.


இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

சிலாபம், பங்கதெனிய, மஹாவௌ, மாதம்பை, முன்னேஸ்வரம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இந் நிலையேற்பட்டதுடன், சற்றுமுன்னர் லுனுவில பகுதியில் உள்ள நீர்த்தேக்கம் நிரம்பியதால் அப்பகுதியும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கொழும்பிலிருந்து அநுராதபுரம் மற்றும் வட பகுதிக்கு பயணிக்கும் வாகனங்கள் குருணாகல் பாதையூடாக பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிலாபம் -புத்தளம் வீதியில் பங்கதெனிய பகுதியின் பிரதான பாதை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், கனரக வாகனங்களைத் தவிர வேறு வாகனங்கள் பயணிக்க முடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
.

ad

ad