பாலியல் ரீதியாக துன்புறுத்தி பின்னர் மனநோயாளி என்று அனுமதித்துள்ளார்கள்
பலவந்தமாக இராணுவத்தில் இணைக்கப்பட்ட 100 பெண்களில் 21 பெண்களுக்கு என்ன நடந்தது ? 30 பெண்களை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தோம் என்று இராணுவம் கூறியது பொய் ! அப்படி என்றால் 9 பெண்களுக்கு என்ன நடந்தது ? பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் தந்தை வழங்கிய இரகசியத் தகவல் ! இந்தப் பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கலாம் !
இராணுவத்தினர் தமிழ் பெண்கள் 100 பேரை தாம் தமது படையணியில் இணைத்திருப்பதாக திடீர் என்று அறிவித்த விடையம் யாவரும் அறிந்ததே.
இதற்கு முன்னதாகவே காதும் காதும் வைத்ததுபோல, வன்னியில் மிகவும் வறிய நிலையில் உள்ள, குடும்பங்களை கருணாவின் சகாக்கள் அணுகி இராணுவத்தில் பெண்களை சேர்த்துக்கொள்ள உள்ளார்கள் என்றும், அப்படி உங்கள் பெண் பிள்ளைகள் சேர்ந்தால் மாதம், 35,000 ரூபாவரை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதில் சிலர் குடும்ப கஷ்டம் காரணமாகவே தமது பிள்ளைகள் இணைய சம்மதித்துள்ளார்கள். மேலும் பலர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய நிலையில், வேறு வழியில்லாமல் தமது பெண் பிள்ளைகள் இராணுவத்தில் சேர சம்மதித்துள்ளார்கள். இந் நிலையில், இராணுவத்தில் இணைந்து சில நாட்களிலேயே சில தமிழ் பெண்கள், அங்கிருந்து விலகி வீடு சென்றுவிட்டனர். பின்னர் பயிற்ச்சி அளிப்பதாகக் கூறி இராணுவத்தினர் சுமார் 100 பெண்களை கிருஷ்ண புரம் பயிற்ச்சி நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.( முன்னர் புலிகளின் நவம் அறிவுக்கூடம்: இருந்த இடத்திற்கு)இராணுவத்தினர் தமிழ் பெண்கள் 100 பேரை தாம் தமது படையணியில் இணைத்திருப்பதாக திடீர் என்று அறிவித்த விடையம் யாவரும் அறிந்ததே.
சில தினங்களுக்கு முன்னர், கிருஷ்ண புரம் பயிற்ச்சி நிலையத்தில் தாதி வேலை பார்க்கும், மற்றும் மாலையில் வீடு திரும்பும் தமிழ் பெண் ஒருவரிடம் இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண் ஒருவர் தகவல் ஒன்றைச் சொல்லி அனுப்பியுள்ளார். அதாவது ....எனது வீட்டிற்குச் சென்று அப்பா- அம்மாவப் பார்த்து, அவர்களை இங்கே ஒருதடவை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள். நாங்கள் நல்ல நிலையில் இல்லை, என்று கூறியுள்ளார். மாலை வேலையை முடித்த தாதி, இச் செய்தியை குறிப்பிட்ட பெண்ணின் அப்பா மற்றும் அம்மாவிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே, இவர்கள் தமக்குத் தெரிந்த மற்றைய பெண் பிள்ளைகளின் பெற்றோர் சிலரை அணுகி நாம் எல்லோரும் சென்று எமது பிள்ளைகளை ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம் என்று ஆலோசித்துள்ளார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர்கள் கிருஷ்ண புரம் சென்றவேளை, வழமைக்கு மாறாக ஆத்திரமடைந்த படையினர், அவர்கள் தம் பிள்ளைகளைப் பார்க்க முடியாது என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் பெற்றோர்கள் பெரும் சந்தேகங்களோடு வீடு திரும்பினர்.