புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2012


இலங்கை இராணுவத்தின் தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகள் நால்வர் கைது!


சிறீலங்கா படையினரின் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் சென்னை பல்லாவரம் பகுதியில் இருந்த ஈழத்தமிழ் அகதிகள் நால்வர் கியூபிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில்
மேலும் தெரியவருவதாவது, சிறீலங்கா படையினர் வன்னியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் முன்னாள் போராளிகள் இரண்டு பேரை கைதுசெய்து விசாரணை நடத்தியுள்ளார்கள் அவர்களின் புலனாய்வு தகலின் படி சிறீலங்காப்படையின் அதிகாரிகள் இந்திய மத்திய உளவுத்துறைக்கு இரகசிய தகவல் அனுப்பியுள்ளார்கள்.

இதனை தொடர்ந்து மத்திய உளவுத்துறையினரும் கியூ பிரிவு காவல்துறையினரும் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்கள்.
அதன் பின்னர் ஜ.ஜீ.ஆபாஸ்குமார் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் சென்னை பல்லாவரம் அருகில் பொழிச்சலூரில் வீட்டில் தங்கியிருந்த மகேஸ்வரன் உள்ளிட்ட நான்கு பேரினை கைதுசெய்துள்ளார்கள் அவர்களை இரகசிய இடத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தினகரன் நாளிதழ் உயர் அதிகாரியிடம் கேட்டுள்ளார்கள். தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் இப்போது அதுகுறித்து தெரிவிக்க முடியாதுஎன்றும் அறிவித்துள்ளார்கள்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 2மடிக்கணனி தொலைபேசிகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டு சேதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களை சிறீலங்காவிற்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ad

ad