புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2012



 நேற்று இரவு காங். தலைவர் சோனியா , சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ மாணவியை , டில்லி சப்தர்ஜூங் மருத்துவமனைக்கு ‌நேரில் சென்று பார்த்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
டில்லியில், ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்ட சம்பவம், நேற்று பார்லிமென்டின் இரு சபைகளிலும் எதிரொலித்து, கடும் அமளியை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னைக்காக, ராஜ்யசபா
அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவியை , மருத்துவமனைக்கு நேரில் சென்று காங். தலைவர் சோனியா சந்தித்து ஆறுதல் கூறினார். குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என கூறினார்.
நாட்டின் தலைநகருக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது அந்த சம்பவம். டில்லியில், கடந்த ஞாயிறன்று இரவு, நண்பருடன் பஸ்சில் பயணித்த, 23 வயது மருத்துவ மாணவி, ஏழு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். அவரது நண்பரும், கடுமையாகத் தாக்கப்பட்டு, தூக்கியெறியப்பட்டார். நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய, இந்த கொடூர சம்பவம், நேற்று பார்லிமென்டில் எதிரொலித்தது. இதில் இரு அவைகளில் பெண் எம்.பி.க்கள் கொந்தளித்து போயினர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஆவேசத்துடன் பேசினர். நேற்று காலையில், ராஜ்யசபா கூடியதும் கேள்வி நேரம் ஆரம்பமானது. ‌எனினும் முக்கிய பிரச்னையாக டில்லி கற்பழிப்பு சம்பவம் குறி்த்து எம்.பி.க்கள் பேசினர்.

பார்லி.யில் கொந்தளித்த எம்.பி.க்கள்
பார்லிமென்ட் லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், நாட்டின் தலைநகரான டில்லியில், பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை.டில்லி நகரின் சட்டம் - ஒழுங்கு என்பது, மாநில அரசின் கைகளில் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, நடந்துள்ள சம்பவத்துக்கு, மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். பள்ளி பேருந்தில், இதுபோன்ற அநாகரிக சம்பவம், நடைபெற்றுள்ளது.இந்த சம்பவம் குறித்து, உள்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு, கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்றார்.சமாஜ்வாதி கட்சி எம்.பி. ‌ஜெயாபச்சன் பேசுகையில், குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும்என்றார். பின்னர் பகுஜன்சமாஜ் கட்சி த்லைவர் மாயாவதி பேசுகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் கடுமையாக்கவும், தற்போதுள்ள சட்டவிதிகளில் திருத்தம் கொண்டு வந்து, குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்க வகை செய்ய வேண்டும் என்றார். இவரைத்தொடர்ந்து ரேணுகா சவுத்ரி, வசந்தி ஸ்டான்லி உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் பார்லிமென்ட்டில் கொந்தளித்தனர்.
மாணவியை நேரில் சந்தித்த சோனியா 
இந்நிலையில் நேற்று இரவு காங். தலைவர் சோனியா , சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ மாணவியை , டில்லி சப்தர்ஜூங் மருத்துவமனைக்கு ‌நேரில் சென்று பார்த்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இது தொடர்பாக காங். செய்தி தொடர்பாளர் ஜெனார்த்தன் திவேதி வெளியி்ட்டுள்ள அறிக்கையில், மருத்துவ மாணவியை சோனியா சந்தித்து ஆறுதல் கூறினார். நடந்த சம்பவம் வேதனை அளிக்கிறது எனவும், குற்றவாளிகள் யாரும் தப்பமுடியாது. அவர்கள் அனைவரும் கைது செய்து உரிய விசாரணை நடத்த டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்திற்கும், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவிற்கும் கடிதம் வாயிலாக உத்தரவிட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை கைது செய்யவும், சட்டம் ,ஒழுங்கினை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அந்த செய்தியில் திவேதி கூறினார்.இதற்கிடையே சம்பவம் குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகம் சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளது. ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால், எஞ்சிய குற்றவாளிகளை பிடிக்க ‌டில்லி போலீசார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

ad

ad