புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2012


பிரதம நீதியரசர் தெரிவுக்குழு முன் நாளை மீண்டும் ஆஜர்:
ஷிராணி

நீதிபதிகளின் மாறுபட்ட கருத்துகளால் கூட்டத்திலிருந்து

  வெளியேறினார்

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க நாளை பிற்பகல் மீண்டும் பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளில் இவர் கலந்துகொண்டார்.
நேற்று முற்பகல் 10.15 மணிக்கு பாராளுமன்றத்துக்கு வருகைதந்த ஷிராணி பண்டாரநாயக்க பாராளுமன்றத்
தெரிவுக்குழுவின் விசாரணைகளில் கலந்துகொண்டார். மதிய உணவுக்காக தெரிவுக்குழுவின் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டு, மாலைவரை விசாரணைகள் தொடர்ந்தன.
இன்று முற்பகல் 10.30 மணிக்கு மீண்டும் தெரிவுக்குழு கூடி இவ்விடயம் குறித்து ஆராயவுள்ளது. எனினும், இதில் ஷிராணி பண்டாரநாயக்க கலந்து கொள்ளமாட்டார். எனினும், நாளையதினம் பிற்பகல் 2.30 மணிக்குக் கூடவிருக்கும் தெரிவுக்குழு விசாரணைகளில் ஷிராணி பண்டாரநாயக்க கலந்துகொள்ளவுள்ளாரெனத் தெரிய வருகிறது.
கடந்த திங்களன்று நீதவான் நீதிமன் றங்களும், மாவட்ட நீதிமன்றங்களும் வழக்குகளை விசாரணை செய்கின்றன என்பதை தெரிந்திருந்தும் பிரதம நீதியரசரின் ஆணைப்படி சகல நீதவான்களும், மாவட்ட நீதிபதிகளும் ஒரு விசேட கூட்டத்திற்காக கொழும் புக்கு அவசரமாக அழைக்கப்பட்டனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க, தாம் குற்றம் இழைக்கவில்லை என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவிப்பதாக விசயம றிந்த வட்டாரங்களில் இருந்து தெரியவந்தது.
அங்கு கலந்து கொண்டவர்களில் ஒரு சாரார் பிரதம நீதியரசர் அஞ்சாமல் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டுமென்று வாதாடினார்கள். இந்த விசாரணையில் தான் நிரபராதி என்பதை பிரதம நீதியரசர் எடுத்துரைக்க வேண்டும் என்று அங்கு பலரும் கருத்து தெரிவித்தனர்.
இன்னுமொருசாரார் விசயத்தை பெரிதுபடுத்தாமல் ஜனாதிபதியுடன் பேசி இந்தப் பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்ள வேண்டுமென்று யோசனை தெரிவித்தனர். இன்னுமொரு சாரார் இந்த தெரிவுக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் போராட வேண்டுமென்று கூறியதாக அறிவிக்கப்படுகின்றது.
இவ்விதம் பலதரப்பட்ட கருத்துக்கள் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு அங்கு வாக்குவாதங்களும், சர்ச்சையும் ஏற்படும் என்பதை உணர்ந்து கொண்ட பிரதம நீதியரசர் அக்கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக அறிவிக்கப்படுகிறது.
அதையடுத்து ஒரு சிறு குழுவினரே அங்கு குழுமியிருந்தவர்களின் சார்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டனர். இவ்வறிக்கையில் பிரதம நீதியரசர் தவறிழைக்கவில்லை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
இவ்வறிக்கை பற்றி கருத்து தெரிவித்த பல நீதிபதிகளும், நீதவான்களும் இது அங்கு குழுமியிருந்த அனைவரும் ஒன்றிணைந்து எடுத்த முடிவல்ல என்றும், ஒரு சிலர் மாத்திரம் எடுத்த முடிவென்று கண்டனம் தெரிவித்தனர்.

ad

ad