புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2012

LIVE SCORE-NEWS
இந்திய அணியின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 117 ரன்னாக இருந்தது. 
 4- வது விக்கெட்டுக்கு களம் வந்த கோலி 6 ரன் எடுத்து பெவுலியன்
திரும்பினார். அவரைத்தொடர்ந்து வந்த யுவராஜ் சிங், தெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.

கூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 9 விக்கெட் வித்தி யாசத்திலும்,
மும்பையில் நடந்த 2-வது டெஸ்டில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. 

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. மும்பை டெஸ்டில் விளையாடிய சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் கொல்கத்தா டெஸ்டில் நீக்கப்பட்டார். இதனால் 100-வது டெஸ்டில் விளையாடும் அவரது வாய்ப்பு பறிபோனது. அவருக்கு பதிலாக வேகப்பந்து வீரர் இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டார். 

இங்கிலாந்து அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக  இயன்பெல், ஸ்டீபன்பின்  சேர்க்கப்பட்டனர். 

இந்திய அணி கேப்டன் டோனி `டாஸ்' வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். ஷேவாக்கும், காம்பீரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அதிரடி பேட்ஸ்மேன் ஷேவாக் 23 ரன் எடுத்து இருந்தபோது ரன்அவுட் ஆனார். அடுத்த வந்த புஜாரா 16 ரன்னில் பனேசர் பந்தில் ஆட்டம் இழந்தார். இதனால் இந்திய 88 ரன்னில் 2 விக்கெட்டை இழந்தது. 

3-வது விக்கெட்டுக்கு காம்பீருடன், தெண்டுல்கர் ஜோடி சேர்ந்தார். மறு முனையில் இருந்த காம்பீர் சிறப்பாக விளையாடி 50 ரன்னை தொட்டார். 53-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 21-வது அரைசதம் ஆகும். 

மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன் எடுத்து இருந்தது. காம்பீர் 50 ரன்னிலும், தெண்டுல்கர் 1 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். 33.4 ஓவரில் இந்திய அணி 100 ரன்னை தொட்டது. சிறப்பாக ஆடிய காம்பீர் 60 ரன்னில் பனேசர் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 117 ரன்னாக இருந்தது. 

அடுத்து 4- வது விக்கெட்டுக்கு களம் வந்த கோலி 6 ரன் எடுத்து பெவுலியன்
திரும்பினார். அவரைத்தொடர்ந்து வந்த யுவராஜ் சிங், தெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.

ad

ad