புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2013


இலங்கை தூதரகத்தை சுற்றிவளைத்து நாளை சென்னையில் முற்றுகை போராட்டம்

இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வரும் போர்க்குற்றங்கள்-இனப்படுகொலையை கண்டித்து, போர்க்குற்றங்கள்-இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர் அமைப்பு சார்பில் நாளை 30-ந் திகதி சென்னையில்
உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளனர். 

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

முள்ளிவாய்க்கால் படுகொலையை செய்து முடித்த இலங்கை அரசு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களையும் கொலை செய்ய முயற்சி செய்கிறது என்பது இவர்களின் குற்றச்சாட்டு. முள்ளிவாய்க்கால் போரின் முடிவில் கைது செய்யப்பட்ட 11 ஆயிரம் பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. 

அதேபோல் கடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி தமிழர்களுக்கு உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய யாழ் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களை கைது செய்தனர். இதற்கு சிங்கள மாணவர் அமைப்புகளும், பேராசிரியர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிலரை மட்டும் சித்ரவதைக்குப் பின் விடுதலை செய்துள்ளது. 

மீதமுள்ள மாணவர்களை என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இனவெறி மிகுந்த இலங்கை அரசிடம் இருந்து மாணவர்களை உயிருடன் மீட்பது தமிழக அரசின் கடமையாகும். இலங்கையில் நடைபெறும் கொடுஞ்செயல்களை தடுத்து நிறுத்த இந்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும். 

இதனை வலியுறுத்தி நாளைய தினம் (ஜன.30) சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

போர்க்குற்றம்-இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பின் சார்பில், சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பேசிய தமிழ் ஈழ பாதுகாப்பு இயக்க தலைவர் பழ.நெடுமாறன் , இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டத்தில் இன உணர்வோடு அனைவரும் பங்கு பெறவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். 

ad

ad