புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2013


மாலி நாட்டு ஏர் போட் தீவிரவாதிகள் கைகளில் !மாலி நாட்டில் தரையிறங்கி உள்ள பிரான்ஸ் ராணுவம், தீவிரவாத அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த விமான நிலையம் ஒன்றை கைப்பற்றியுள்ளது.
 காவோ நகருக்கு அருகேயிருந்த இந்த விமான நிலையத்தை முன்பு கைப்பற்றியிருந்த, அல்-காய்தா ஆதரவு தீவிரவாத அமைப்பினர், அதை தமது ராணுவ முகாமாக பயன்படுத்தி வந்தனர்.

மாலி நாட்டின் வட பகுதியில் உள்ள காவோ, கிடல், திம்புக்து ஆகிய மூன்று நகரங்களுமே, தீவிரவாத அமைப்பினரின் பலம்வாய்ந்த பகுதிகளாக உள்ளன. தற்போது கைப்பற்றப்பட்டுள்ள விமான நிலையம், காவோ நகருக்கு மிக அருகில் உள்ளது. எனவே, அடுத்த கட்டமாக பிரான்ஸ் ராணுவம், காலோ நகருக்குள் நுழைய முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.

தற்போது, இந்த விமான நிலையத்தில் இருந்து, காவோ நகரை நோக்கிய தாக்குதல்களை தொடங்கியுள்ளது, பிரான்ஸ் ராணுவம். பிரான்ஸ் ராணுவத்தின் 600 வீரர்கள் அடங்கிய மற்றொரு படைப்பிரிவு, திம்புக்து நகரை நோக்கி செல்கிறது என்றும் தெரியவருகிறது. அந்த நகரில் உள்ள அனைத்து வெளித் தொடர்புகளும் வெட்டப்பட்டுள்ளன. வீதிகளும் அடைக்கப்பட்டுள்ளன. செல்போன் டவர்கள், செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன.

ad

ad