புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2013


யாழ். இந்து கல்லூரி மாணவர்கள் எண்மர் கணித பிரிவில் 3ஏ சித்திபெற்று சாதனை

க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் சில பாடசாலைகளில் இணையவழி மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரி கணிதம் மற்றும் வர்த்தகப் பிரிவிலும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை விஞ்ஞானப் பிரிவிலும் முன்னிலையில் உள்ளன. 

இதன்படி யாழ். இந்துக் கல்லூரியில் கணிதப்பிரிவில் எண்மர் 3ஏ பெற்றுள்ளனர். சிவஞானம் அமுதீசன், மகேஸ்வரன் கஜீபன், அகிலதாஸ் விமோசனன், கணேசலிங்கம் கணபாலன், திருச்செல்வம் ஜனதன், குணரட்ணம் சுஜீவன், பாஸ்கரக்குருக்கள் ஜெனார்த்தனசர்மா, விக்னேஸ்வரன் மகிழன் ஆகியோராவார். கணிதப்பிரிவில் 9பேர் 2ஏ பியும் பெற்றுள்ளனர். 

வர்த்தகப் பிரிவில் அறுவர் 3ஏ பெற்றுள்ளனர். குணசீலன் கௌதமன் சிவகுமாரன் பிரகாஸ் பாஸ்கரன் றனுஜன், புஸ்பராசன் ரின்சி கேதீஸ்வரன் துசியந்தன் ஜகதாஸ் வேணுகானன் ஆகியோராவர். ஐவர் 2ஏபியும் விஞ்ஞானப் பிரிவில் 10 பேர் 2ஏபியும் பெற்றுள்ளனர். 

வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவில் எம்.மிதுரிகா 3ஏ (மாவட்ட நிலை 01), எஸ்.சுமிதா 3ஏ (மாவட்ட நிலை 04), என். மாதங்கி (மாவட்ட நிலை 10) ஆருரன் 2ஏசி பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். 

இதேவேளை யாழ். இந்துமகளிர் கல்லூரியில் வர்த்தகப் பிரிவில் ஐவருக்கு மேல் 3ஏ பெறுபேற்றைப் பெற்றுள்ளனர். இதனிடையே வீரகெட்டிய ராஜபக்ஷ மத்திய மகாவித்தியாலய மாணவர்களான ஆர்.எஸ்.பி.கசுன் லக்மால் விஞ்ஞானப்பிரிவிலும், ருசிரு கம்பீராராச்சி கணிதப்பிரிவிலும் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளனர். 

ad

ad