புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2013

அன்பான புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு விடுக்கும் செயதி
இலங்கைத் தீவில் தமிழினப்படுகொலையின் அதி உச்சமான 2009 ம் ஆண்டுக்கு முன்னராகவும், அதற்கு பின்னராகவும் புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களும், தாய்த்தமிழ் நாட்டு மக்களும் தொடர்ந்து முன்னெடுத்து வரும்
தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அதற்கு சரியான நியாயமான தீர்வு கிடைக்கும் வரை தமது தொடர் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.

இந்த வகையில் ஜெனீவா மனிதவுரிமைகள் செயலகத்திற்கு முன்பாக கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சனநாயகக் கவனயீர்ப்புப் போராட்டங்கள் உச்ச தமிழீன அழிப்பிற்கு பின் இன்னும் வீரியம் கொண்டு நிற்கின்றது. 2009 ம் ஆண்டிற்கு பிற்பாடு குறிப்பிட்டுச்சொல்லக்கூடியதான சனநாயக போராட்டங்களான

ஐரோப்பிய பாராளுமன்றம் ஐரோப்பிய ஒன்றியம் உடாக நீதி கேட்டு ஆயிரம் கிலோ மீற்றர் தூரம் கால்நடையாகவும், துவிச்சக்கரவண்டி ஊடாக மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்புப்போராட்டமும். ஒரு கோடி கையெழுத்துப்போராட்டம், ஒவ்வொரு நாடுகளிலும் நடைபெறும் தொடர்போராட்டம், அரசியல் பிரமுகர்கள் சந்திப்புக்களும், அடையாள உண்ணா மறுப்பு போராட்டங்கள் என பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.

இந்தவகையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25ம் திகதி முதல் மார்ச் 25 திகதி வரை ஜெனீவா மனிதவுரிமைகள் செயலகத்தில் நடைபெறவுள்ள 22 வது கூட்டத்தொடரில் சிறீலங்கா அரசு மீது 2012 ல் வெளியிடப்பட்ட அறிக்கையும், அதையொட்டி எடுக்கப்படப்போகும் 2 வது தீர்மானமும், தற்பொழுது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒருசில மைல்கல்லாக அமையப்போகின்றன.

இதனையொட்டி எதிர் வரும் மார்ச் மாதம் 1ம் திகதியிலிருந்து 4ம் திகதி வரை சர்வதேச ரீதியாக இயங்கி வரும் மக்கள் பேரவையினர் கலந்து கொள்ளும் மாநாடும், அதனையொட்டி மார்ச் 4ம் திகதி நடைபெறப்போகும் உலகத்தமிழ் மக்களின் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியும் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி கடந்த ஆண்டு கால்நடையாக 1000 கிலோ மீற்றர் தூரம் சென்றவர்களில் ஒருவரான திரு. கஜன் அவர்கள் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் பெப்ரவரி 25ம் திகதி முதல் மார்ச் 5ம் திகதி வரை ஜெனீவா மனிதவுரிமைகள் செயலகத்திற்கு முன்பாக முருகதாசன் திடலில் காலை 7.30 மணிமுதல் மாலை 6.00 மணிவரை அடையாள உண்ணாமறுப்புப் போராட்டம் நடாத்துவதோடு இலங்கைத்தீவிற்கு ஆங்கிலேய ஆட்சியாளர்களால் சுதந்திரம் வழங்கப்பட்ட 65 ஆண்டுகளில் அத்தீவின் பூர்வீகக் குடிகளான தமிழ்மக்களுக்கு சிங்கள ஏகாதிபத்தியம் செய்த அடக்குமுறைகள், தமிழின அழிப்பு படுகொலைகள் , நிலப்பறிப்புகள், தமிழ்ப்பெண்கள் மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறைகள் பற்றிய சாட்சியங்கள் கொண்ட நிழற்படக் கண்காட்சியும் நடாத்தவுள்ளார்.

( இதற்கான நிழற்படங்களை தனிப்பட்டவர்கள், அமைப்புக்கள், இணையத்தளங்கள் இவருக்கு வழங்கி வருகின்றனர். இது பற்றிய நிழற்படங்கள் யாரிடமாவது இருக்கும் பட்சத்தில் பின் வரும்punithapoomi@gmail.comஇணையத்தள முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் ) தொடர்ந்தும் சுவிசு தமிழ் இளையோர் அமைப்பினர் மார்ச் 25ம் திகதி வரை தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தவுள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு
கடந்த 65 வருடங்களாக தமிழின மக்களின் வாழ்வை சின்னா பின்னப்படுத்தி சிதைத்த சிங்களபேரினவாத அரசிற்கு தமிழின மக்களால் முன்னெடுக்கப்பட்ட உயிர் அர்ப்பணிப்பு கொண்ட போராட்டமும், சனநாயக வழியிலான போராட்டமும் புலம்பெயர் மக்களால் தொடரப்பட்ட சர்வதேசத்திடம் நோக்கிய போராட்டமும் இன்று தமிழ்மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக சர்வதேசத்தின் சமிக்கையாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் எந்தளவு தூரம் தமிழ் இனத்தின் நிம்மதியான, சுதந்திரமான வாழ்வுக்கு வழியேற்படுத்தித் தரப்போகின்றன என்பதை புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் தாயக விடுதலை உணர்வை வெளிக்காட்டுதலிலேயே அடங்கியிருக்கின்றது என்பது சர்வதேச அரசியல் ராஜதந்திரிகளின் கணிப்பாகவுள்ளது.

கனிந்து வந்துள்ள இக்காலத்தை புரிந்து கொண்டு அனைத்து தமிழ்மக்களும் எதிர் வரும் மார்ச் மாதம் 4ம் திகதி திங்கட்கிழமை ஜெனீவா புகையிரத நிலையத்தில் இருந்து பி. பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகும் மாபெரும் பேரணியில் சுவிசுவாழ் தமிழீழ மக்களும், ஐரோப்பிய வாழ் மக்களும் லட்சக்கணக்காக கலந்து கொண்டு தமது தாய் மண் உணர்வை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.
பிரான்சில் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ள தமிழர் தொடர்வண்டி ( கடுகதிச்சேவை TGV ) காலை 8.11 மணிக்கு புறப்பட்டு 21.49 ற்கு பிரான்சை வந்தடைகின்றது.

இதே போலவே அனைத்து நாடுகளிலும் போக்குவரத்து ஏற்பாடுகள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உங்கள் பயணப்பங்களிப்பை உறுதிப்படுத்த அந்தந்த நாட்டு கிளைகள், தேசியச் செயற்;பாட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிரான்சில் பயணச்சீட்டுக்களை பெற்றுகொள்ள லாச்சபலில் ஈழமுரசு பத்திரிகைக் காரியாலயம், தாளம் வீடியோ, ஈழநாடு ( தமிழாலையம் ) மற்றும் தமிழ்ச்சங்க உறுப்பினர்களிடமும், தமிழ்த்தேசிய விடுதலைச் செயற்பாட்டாளர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

மேலதிக விபரங்கள் பெற்றுக்கொள்ள: தமிழர் ஒருங்கிணைப்புக்குழு– பிரான்சு
தொலை பேசி இல.  0033 - 1 43 58 11 42

ad

ad