புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2013


யாழில் பாதுகாப்பு தீவிரம்: சோதனைகள் அதிகரிப்பு! மக்களின் இயல்புநிலை பாதிப்பு

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், யாழ் நகரத்திற்குள் வருகை வாகனங்கள் யாவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நகரத்திற்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்குச் செல்லும் பாதைகள் யாவும் அவசர அவசரமாக திருத்தப்பட்டு குறித்த வீதிகளில் 25 மீற்றருக்கு ஒரு படையினர் வீதம் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
சுன்னாகத்தில் ஜனாதிபதியின் முதல் நிகழ்வு நடைபெறவுள்ளதால் அப்பகுதியில் 200ற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு விசேட ரோந்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீதிகளில் வீதித்தடைகளும் ஏற்படுத்தப்பட்டு இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு கடும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்று இரவு யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நாளை காலை சுன்னாகத்தில் மின்சார சபையின் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதோடு, யாழ்.மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.
மாலை நயீனாதீவு நாகவிகாரைக்கும், நாகபூசணி அம்மன் கோயிலுக்கும்,  சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.
புதன்கிழமை காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட நவீன சத்திரசிகிச்சைக் கூடத்தைத் திறந்து வைக்கவுள்ளதோடு, சாவகச்சேரி நீதிமன்ற கட்டிடத் தொகுதியையும் திறந்து வைக்கவுள்ளதாகத் தெரியவருகின்றது.

ad

ad