காதலிக்க மறுத்ததால், ஆசிட் வீச்சுக்கு உள்ளான காரைக்காலைச் சேர்ந்த வினோதினி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காரைக்காலைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வினோதினி. இவரை சுரேஷ் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலை ஏற்க மறுத்த வினோதினி மீது கடந்த நவம்பர்14ம் தேதி சுரேஷ் ஆசிட் வீசினார். இதில் முகம் மற்றும் உடலெங்கும் வெந்த நிலையில், காரைக்கால் அரசு மருத்துவமனையில் வினோதினி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினோதினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.