புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2013


தமிழ் ஈழத்திற்கு வாக்கெடுப்பு நடத்தக்கோரி
 சென்னையில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை! 

    ர்வதேச விதிமுறைகnakeeran

ளை இலங்கைக்காக உடைத்தெறிந்த ஐ.நா. அதிகாரிகளை கண்டித்து சென்னை அடையாறில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்றது. இந்த இயக்கத்தின் தலைவர் திருமுருகன் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், வேல்முருகன், ஜவஹருல்லா, மணியரசன், விடுதலை ராஜேந்திரன் உள்பட 39 இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதற்கிடையே மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் தலைமையில் சுமார் 50 பேர் மேடைக்கு பின்புறம் போலீசாரால் போடப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்தெறிந்து கொண்டு கால்வாய்கரை சாலை வழியாக ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட ஓடினர். 
இதனால் அங்கு போலீசாருக்கும் மே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. போலீசாரின் தடையை மீறி 2ம் தெருவில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை நோக்கி அவர்கள் சென்றனர். அப்போது அங்கும் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேற்கொண்டு செல்ல முடியாத அவர்களை அங்கேயே அமர்ந்து ஐ.நா. அலுவலகத்தை கண்டித்து முழுக்க மிட்டனர். 
போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். இதற்கிடையே போராட்டம் நடத்திய இயக்கத்தினரின் மற்றொரு பிரிவினர் ஐ.நா. அதிகாரிகள் 3 பேரின் படங்களையும் தீயிட்டு கொளுத்தினார்கள். ராஜபக்சேவின் முகமூடி அணிந்த ஒருவருக்கு செருப்பு மாலை போட்டு தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். ஐ.நா. சபையை முற்றுகையிடும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

ad

ad