புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2013


பிரான்சில் நடைபெற்ற வன்னிமயில் விருது 2012 போட்டி

முடிவுகள்.படங்கள் 
பிரான்சுதமிழ்ப்பெண்கள் அமைப்புநடாத்தும் வன்னிமயில் விருது 2012விடுதலைபாடல் நடனப்போட்டிமிகவும் சிறப்பாகநடைபெற்றது. பிரான்சின் புறநகர்பகுதிகளில் ஒன்றானநியுலீசூர்மான் என்னும் பிரதேசத்தில் 23ம் திகதிசனிக்கிழமை 24 ம் திகதிஞாயிறுக்கிழமைஆகிய இரண்டுநாட்களும் நடைபெற்றன. சனிக்கிழமைகாலை 11. 00 மணிக்கு கரும்புலிமேஐர்அருணன் தயார்ஈகைச்சுடரினைஏற்றிவைக்கஅகவணக்கம் செலுத்தப்பட்டுமலர்வணக்கமும் செலுத்தப்பட்டதுடன்பிரான்சில் சிறந்தஅறிவிப்பாள்களில் ஒருவரானதிரு யஸ்ரின் அவர்கள் ஆரம்பித்துவைக்கஅவருடன் பிரதானபெண் அறிவிப்பாளர்திருமதிஞானசீலிஅவர்களும் தொகுத்துவழங்கினர்.

பிரான்சுதமிழ்பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர்வரவேற்புரையைநிகழ்த்தியிருந்தார்அத்துடன் 2012 ல் நடைபெறவிருந்த இப்போட்டிசிங்களபேரினவாதஅரசின் கடல்கடந்தபயங்கரவாதகொலைக்கரங்களுக்குள் படுகொலைசெய்யப்பட்டகேணல் பரிதிஅவர்களின் வீரச்சாவினால் பின் போடப்பட்டிருந்தமையும்போட்டியாளர்களின் நன்மைகருதியே இந்தகாலமும் நாட்களும் நடனஆசிரியர்களாலும்,நடுத்துனர்களாலும் தெரிவுசெய்யப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்துபோட்டிக்கானநடுவர்கள் அறிமுகப்படுத்திவைக்கப்பட்டனர்.

•    தலைமைநடுவராகடென்மார்க் கலாச்சேத்திராஆடல் இசைக்கல்லூரிஅதிபரும்,யாழ் பல்கலைக்கழகநுன்கலைபீடத்தின்  மூன்றுவருடகாலசிறப்புப்பட்டதாரியும், 25 வருடங்களுக்குமேலானகலைப்பணியாற்றிவருபவரும் டென்மார்க்,நோர்வே,Nஐர்மனி,சுவிஸ்போன்றநாடுகளில் நடனப்போட்டிகளில் நடுவராககடமையாற்றியவரும் சுவிஸ்,பிரித்தானியாபோன்றநாடுகளில் நடனப் பரீட்சைகளில் நடுவரராககடமையாற்றியஅனுபவமிக்கவரும் நாட்டியதாரகைபட்டத்திற்குரியவருமானசிறீமதிசுமித்திராசுகேந்திராஅவர்களும்

•    யாழ் பல்கலைகழகத்தில்மாணவியும்,சுவிஸ்பேர்ண் மாநிலத்தில் நர்த்தனாநடனக்கல்லூரி 15 வருடங்களுக்குமேலாகநடாத்திவருபவரும்,நாட்டியகலைமணிபட்டத்துக்குரியவருமானதிருமதி. சர்வானந்தன் அனுசாஅவர்களும்.

•    யாழ் பல்கலைக்கழகமாணவியும்,சுவிஸ்பேர்புக் சிவாலயாநடனாலயம் ஆசிரியருமாகியதிருமதி. இன்பநாதன் சிவறஞ்சனிஅவர்களும் கடமையாற்றியிருந்தனர்.

நடுவர்கள் மூவரும் மேடைக்குஅழைக்கப்பட்டுமகளிர்அமைப்புப் பொறுப்பாளர்அவர்களால் மதிப்பளிக்கப்பட்டுபோட்டிக்கானபத்திரங்களும் கரங்களில் ஒப்படைக்கப்பட்டன.
தனிநடனப்போட்டிகளில் மத்தியபிரிவுக்கானதுமுதற்போட்டியாகநடைபெற்றது. இதில் 22 போட்டியாளர்களும்  இடைவேளையுடன் கீழ் பிரிவிற்கானபோட்டியும் இதில் 16 போட்டியாளர்களும் போட்டியிட்டனர்.

அதனைத்தொடர்ந்துமேற்பிரிவுக்கானபோட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியிலும் 27 போட்டியாளர்கள் போட்டியிட்டனர். மண்டபமும் இருக்கைகளும்  போதாதநிலையில்பார்வையாளர்கள் நின்றுபார்க்கவேண்டியசூழ்நிலைஏற்பட்டிருந்தது.போட்டிகள் யாவும் மிகவும் விறுவிறுப்பாகபோட்டியாளர்கள்  ஆர்வத்துடன் உற்சாகத்துடன் கலந்துகொண்டிருந்தனர்.
அதனைத்தொடர்ந்துகுழுப்பிரிவுக்கானபோட்டிகள்நடைபெற்றது.

முதலில் கீழ்பிரிவிற்கானபோட்டியும்,அதனைத்தொடர்ந்துமதியபிரிவிற்கும்,மேற்பிரிவிற்குமான போட்டிகளும் நடைபெற்றன.ஓவ்வொருகுழுக்களும் காட்சிப்படுத்தியவிதங்களும் நடனங்களும் கண்கொள்ளாகாட்சியாகவும் தாயகத்திற்குசிலமணிநேரம் எம்மையெல்லாம் கொண்டுசென்றிருந்தது.
சனிக்கிழமைநடைபெற்றபோட்டிகள் திட்டமிட்டவகையில் குறித்தநேரத்திற்குமுடிக்கமுடியாததொருசூழ்நிலைநடத்துனர்களுக்குஏற்பட்டபோதும் போட்டியாளர்கள்சிறுவர்கள் முதல் பெரியவர்முடிவை அறிவதற்குஆவலாக இருந்திருந்தனர்.

வன்னிமயில் 2013ல்தனிப்போட்டியாளர்களின் முடிவுகள் பின்வருமாறு:

கீழ் பிரிவில் :

3ம் இடத்தை: றஞ்சன் யான்பிறிந்தாஅவர்களும்
வசந்தகுமார்லேதிகாஆகிய இருவரும்
2ம் இடத்தை:சிறீகரன்சஞ்சிதா
கோவிந்தராஐ; சௌந்தர்யாnஐசிக்காஆகிய இருவரும்
1ம் இடத்தை:வசந்தகுமார்லேனிதாபெற்றுக்கொண்டனர்
மத்தியபிரிவில் :
3ம் இடத்தை:லஐPந்திரன் சௌமியாஅவர்களும்
2ம் இடத்தை:திருஞானசுந்தரம் ஆராதணி
கேதீசுவரன் சுருதிகாஆகிய இருவரும்
1ம் இடத்தை:வரதராஐன் கார்த்திகாபெற்றுக்கொண்டனர்

மேற்பிரிவில்.

3ம் இடத்தை: முருகதாசன் குமுதினிஅவர்களும்
:குலநாதன் விவேக்காஅவர்களும்
2ம் இடத்தை :கேதீசுவரன் கெனிதவி
          : சதீஸ்வரன் நிதுசாஆகிய இருவரும்
1ம் இடத்தை:கந்தசாமிசேபியாபெற்றுக்கொண்டனர்

குழுநடனத்தில் 
கீழ்பிரிவில்.

3ம் இடத்தைகுழு இலக்கம் 03 : ஆதிபராசக்திநாட்டியப்பள்ளியும்
2ம் இடத்தை  குழு இலக்கம் 02 : சோதியாகலைக்கல்லூரியும்
 1ம் இடத்தை குழு இலக்கம் 01:ஆதிபராசக்திநாட்டியபள்ளியும் பெற்றுக்கொண்டனர்.

மத்தியபிரிவில்.
3ம் இடத்தை: குழு இலக்கம் 07 : குசன்வில்தமிழ்ச்சோலையும்,
குழு இலக்கம் 06 : செல் தமிழ்ச்சோலையும்இருபாடசாலை
2ம்இடத்தை: குழு இலக்கம் 10: செவரோன் தமிழ்ச்சோலையும்பெற்றுக்கொண்டனர்.
குழு இலக்கம் 08:ஆதிபராசக்திநாட்டியபள்ளியும் இருபாடசாலை
1ம் இடத்தை குழு இலக்கம் 14: குசன்வில் தமிழ்ச்சோலையும்பெற்றுக் கொண்டனர்;.

மேற்பிரிவில் :

3ம் இடத்தை இல. 08: சோதியாகலைக்கல்லூரியும்
2ம் இடத்தை இல .02: செவரோன் தமிழ்ச்சோலையும்
 1ம் இடத்தை  இல. 05: கவின் கலையகம் பெற்றுக்கொண்டன.

24 ம் திகதிஞாயிற்றுக்கிழமைபோட்டிகள் நடைபெற்றது. ஆரம்பநிகழ்வாகஈகைச்சுடரினைகேணல் பரிதிஅவர்களுடையதுணைவியார்ஏற்றிவைக்கஅகவணக்கம் செலுத்தப்பட்டது. போட்டிநடுவர்கள் பற்றியும்,போட்டிநடைமுறைகள் பற்றியும் அறிவிப்பாளர்திரு. யஸ்ரின் அவர்கள் வழங்கியிருந்தார்.

அதிமேற்பிரிவு,அதிஅதிமேற்பிரிவு,சிறப்புப் பிரிவுகளுக்கானபோட்டிகள் நடைபெற்றனஎதிர்பாராதவகையில் காலைநிலைமாற்றத்திற்குமத்தியிலும் கொட்டுபனிக்கும்,குளிருக்குமத்தியிலும் போட்டியாளர்மக்கள் கலந்துகொண்டிருந்தனர்அதிமேற்பிரிவில் 25 போட்டியாளர்களும் அதிஅதிமேற்பிரிவில் 10 போட்டியாளர்களும்,சிறப்புப்பிரிவில் 06 பேரும் போட்டியிருந்தனர். வன்னிமயில் தெரிவுசெய்யப்படுபவர்கள் மேற்படிஅதிமேற்பிரிவிலும் அதிஅதிமேற்பிரிவிலும் தெரிவுசெய்யப்படுவதால் போட்டியாளர்கள் மத்தியில் கடும் போட்டிகள் நடைபெற்றிருந்தது.

அதிமேற்பிரிவில்

3ம் இடத்தை : செல்வி. அரியபுத்திரன் நிதிலா
                       : செல்வி. திருஞானசுந்தரம் ஆதங்கனி
ஆகிய இருவரும்
2ம் இடத்தை : செல்வி.லியோனெஸ்பிரெடி
செல்வி.கணேசலிங்கம் கஐhனி
             1ம் இடத்தை : சிறஸ்கந்தராசாநிருசாஆகியோர்பெற்றிருந்தனர்.

அதிஅதிமேற்பிரிவில்

3ம் இடத்தை: இராமநாதன் அனித்தா
2ம் இடத்தை : காணிக்கைநாதன் nஐனின் சிராணி
             1ம் இடத்தை : முத்துராசாசுவேத்திகாஆகியோர்பெற்றிருந்தனர்.
சிறப்புப்பிரிவில்  3ம் இடத்தை : இராஐலிங்கம் காத்யாயனி
2ம் இடத்தை: செல்வக்குமார்குர்சலியா
1ம் இடத்தை: புஸ்பராசாஅனித்தாஆகியோர்பெற்றிருந்தனர்.
வெற்றிபெற்றபோட்டியாளர்களுக்குதமிழர்ஒருங்கிணைப்புக்குழுவின் உப கட்டமைப்புக்களின் பொறுப்பாளர்கள் பரிசில்கள் சான்றிதழ்கள் வழங்கிமதிப்பளித்தனர்.

வன்னிமயில் 2012 போட்டியின் பிரதானநடுவராககடமையாற்றியசிறீமதிசுமித்திராசுகேந்திராஅவர்கள் போட்டியாளர்களின் திறன் பற்றியும் எவ்வாறுதாங்கள் மூவரும் சேர்ந்து இந்தமுடிவுகள் நீதியாகவும்,நியாயமாகவும்,உண்மையாகவும்,சுதந்திரமாகவும்,கலைத்தாயின் சத்தியத்திற்குமேலாகஎடுக்கப்பட்டமுடிவுகள் என்றும் இவ் முடிவுகளில் ஏற்படும் நன்மைகள் ,தீமைகள் ஏற்புடமை,ஏற்புடமையில்லாமைஎல்லாவற்றிற்கும் தாமேபொறுப்புஎன்பதையும் இவ் முடிவுகளைநடனஆசிரியர்கள்,குழந்தைகள்,பெற்றோர்கள்,பொறுப்பாளர்அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றுகேட்டுக்கொண்டார்.

வன்னிமயில் போட்டிநிகழ்வுக்குபோட்டியாளர்களைதயார்செய்துஅனுப்பிவைத்தஅனைத்து நடனஆசிரியர்கள் மேடைக்குஅழைக்கப்பட்டுமதிப்பளிக்கப்பட்டனர்.
நிகழ்வில் சிறப்புரையினைதமிழர்ஒருங்கிணைப்புக்குழுவின் பேச்சாளர்திரு. சத்தியதாசன் ஆசிரியர்அவர்கள் உரையாற்றியிருந்தார். அவர்தனதுரையில் தாயகத்தின் இன்றையநிலையையும் நாளை 25ம் திகதிஆரம்பமாகும் ஐக்கியநாடுகள் 22வது அமர்வும்,எதிர் வரும் மார்ச் 4ம் திகதிnஐனீவாவில் நடைபெறப்போகும் மாபெரும் பேரணிபற்றியும்,சிறீலங்காஅரசிற்குஎதிராககொண்டுவரப்படவுள்ளதீர்மானம் பற்றியும் எடுத்துக் கூறியிருந்தார்.புலம் பெயர்மக்கள் தொடர்ந்துதாயகத்தின் விடுதலைக்காகசெய்யவேண்டியகாலத்தின் தேவைகருதியபணிகள் பற்றி கூறியிருந்தார்.

தமிழ்ப்பெண்கள் அமைப்புபிரான்சுநடாத்தும் தாயகவிடுதலைப்பாடற்நடனப்போட்டியின் வன்னிமயில் விருதினை 2012யும் வன்னிமயிலாகவும்தெரிவுசெய்யப்பட்டவரின் பெயர்அறிவிக்கப்படுவதற்குமுன் அப்போட்டியில் பங்குபற்றியஅனைத்துபோட்டியார்களும் மேடைக்குஅழைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்குமத்தியல் அறிவிப்பாளர்ஒவ்வொருபோட்டியாளர்களிடம் அவர்களின் மனநிலைதெரிந்துகொள்ளும் வகையிலும் போட்டியாளர்களைஎதையும் ஏற்றுக்கொள்ளும்மனநிலைக்குகொண்டுவரும் வகையில் தனதுநகச்சுவைகேள்விகளால் அவர்கள் அனைவரையும் சமநிலைப்படுத்திவன்னிமயில் 2012 டாகவந்தவர்பெயர்அறிவிக்கப்பட்டது.
செல்வி.நல்லையாஅபிநயாஅவர்கள் 2012ன் சிறந்ததாயகவிடுதலைப்பாடல் நடனப்;போட்டியின் விருதிற்கானவராகதெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவருக்கானபரிசிலையும்,கிரீடத்தையும் கடந்தஆண்டுபிரான்சுவன்னிமயில்களாகவந்திருந்ததிருமதி. Nஐhய் நியோனி,செல்விமகேந்திராசாசமந்தா,மகேந்திராசாசபிதாஆகியோருடன் வன்னிமயில் 2012 நடுவர்களாககடமையாற்றியவர்களும்,பிரான்சுதமிழ்ப்பெண்கள் அமைப்பின் பொறுப்பாளரும்சேர்ந்துவழங்கியிருந்தனர்.

ஒவ்வொருபோட்டியின் முடிவுகள் ஒவ்வொன்றினையும் வெண்திரையில் தமிழ்த்தேசியத் தொலைக்காட்சி ( TTN ) தொழிநுட்பவகையில் காட்சிப்படுத்தியிருந்தது. இப் போட்டிகள் சிறப்புறநடைபெறஆதரவுநல்கியவர்த்தகநிறுவனங்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டுநன்றியும் தெரிவிக்கப்பட்டது.

இரண்டுநாட்களும் மண்டபம் நிறைந்தமக்களுடனும்,கரகோசத்துடனும் இரவு 20.00 நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றிருந்தன.

ad

ad