புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2013


“நோ பயர் சோன்” ஐ.நாவில் திரையிடுவதை தடுக்கமுடியாது!- ஐ. நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம்
சனல்- 4 தொலைக்காட்சியின் “நோ பயர் சோன்” என்ற ஆவணப்படத்தை ஐக்கிய நாடுகள் ஜெனீவா கட்டிடத்தில் திரையிடுவதை நிறுத்தமுடியாது என்று என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
இந்த ஆவணப்படம், சர்வதேச மன்னிப்பு சபையின் ஏற்பாட்டில் நாளை வெள்ளிக்கிழமை ஜெனீவா ஐக்கிய நாடுகள் கட்டிடத்தில் திரையிடப்படவுள்ளது.
இந்த ஆவணப்படத்தை திரையிடுவதால், இலங்கையின் தமிழ் சிங்கள மக்களுக்கு இடையில் உள்ள நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
எனினும், இந்த ஆவணப்படத்தை திரையிடுவது ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு அல்ல. அந்த திரைப்படம், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் தனியான அறையிலேயே காணப்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் தூதுவர் ரெமிகுய்ஸ் ஏ ஹென்செல் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad