புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2013


அவுஸ்திரேலிய கெசினோ சூதாட்ட மன்னன் ஜேம்ஸ் பெக்கர் இலங்கையில் முதலீடு

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல 'கெசினோ' சூதாட்ட வர்த்தகரான ஜேம்ஸ் பெக்கர் இலங்கையில் தனது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று  செய்தி வெளியிட்டுள்ளது.

கெசினோ வியாபாரத்தை உலகம் பூராகவும் விஸ்தரிக்கும் நோக்கில் உள்ள பெக்கர் அதன் ஓர் அங்கமாக இலங்கையிலும் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் முதற்கட்டமாக இலங்கையின் பிரதான அமைச்சர்கள் சிலருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக  குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இது தொடர்பில் இறுதி முடிவு எதனையும் எடுக்கவில்லையெனவும், திட்ட அறிக்கையுடன் வருமாறு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன அந்நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளதாவும் அச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல 'கெசினோ' சூதாட்ட வர்த்தகரான ஜேம்ஸ் பெக்கர் அந்நாட்டின் 3 ஆவது மிகப்பெரிய பணக்காரர் ஆவார். போர்ப் சஞ்சிகையின் தகவலின் படி அவரின் மொத்த சொத்து மதிப்பு 6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
கெசினோ மன்னன் என வர்ணிக்கப்படும் இவர் கடந்த வருடம்  கெசினோ வர்த்தகத்தில் கவனம் செலுத்தும் பொருட்டு தனது குடும்பச் சொத்துக்களை 1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது
.

ad

ad