புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2013


அரசாங்கம் புதிய இனவாதம் ஒன்றை ஏற்படுத்த முயற்சி! பொது பல சேனாவுக்கு கோத்தபாய நிதியுதவி!- மங்கள சமரவீர
அரசாங்கம் சிங்கள அடிப்படைவாதம் மிக்க புதிய நிக்காயா ஒன்றை உருவாக்க முயற்சிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று அரசாங்கம் முஸ்லிம் மற்றும் சிங்க பௌத்தர்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறது.
சிங்கள பௌத்த அடிப்படை வாதத்தை உருவாக்கி, அதன் மூலம் அரசாங்கம் லாபம் தேடும் வகையில் செயற்படுகிறது.
இதனால் தற்போது சரிந்துக் கொண்டு செல்கின்ற தமது வாக்கு வங்கியை நிரப்பிக் கொள்ள முடியும் என்று அரசாங்கம் கருதுகிறது.
இதன் மூலம் மீண்டும் இலங்கையில் இனப்பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த விடயத்தை பொறுத்தவரையில் முஸ்லிம் மக்கள் பொறுமையாக இருப்பதாகவும், அதற்காக ஐக்கிய தேசிய கட்சி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2ம் இணைப்பு
பொது பல சேனாவிற்கு கோத்தபாய ராஜபக்ச நிதியுதவி
பொது பல சேனா அமைப்பிற்கு பாதுகாப்பு செயலாளரே நிதியுதவி வழங்குவதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்துகின்றது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாடு பூராகவும் இன்று கோடிக்கணக்கில் செலவிடப்படுகின்றது.
முஸ்லிம்களுக்கு எதிராக சுவரொட்டி போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
பொது பல சேனா எனப்படும் அடிப்படை வாத அமைப்பிற்கு பாதுகாப்பு செயலாளர் ஊடாக இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நான் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன்.
அது மாத்திரமின்றி இந்த அமைப்பிற்கு பாதுகாப்பு அமைச்சின் ரகசிய கணக்கு ஊடாகவே நிதியுதவிகள் வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கல சமரவீர தெரிவித்துள்ளார்.
எவ்வாயினும் கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பின் போதே ஊடகவியலாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் குற்றச்சாட்டை நிராகரித்தார்.
பாதுகாப்பு அமைச்சினால் பொது பல சேனா அமைப்பிற்கு இவ்வாறு நிதியுதவி வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்தார்.

ad

ad