புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2013



மட்டக்களப்பில் தொடர்ந்து அடை மழை - சில பாடசாலைகளுக்கு பூட்டு

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் உட்புகுந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இப்பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் இந்த தொடர் மழையினால் மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலை, அன்றாடம் கூலித் தொழில் செய்ய முடியாமை, அரசாங்க மற்றும் அரச சார்பற்ற காரியாலயங்களுக்குச் செல்ல முடியாமை போன்ற பல்வேறு அசௌகரியங்களை பொது மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் புதிய காத்தான்குடி தாறுஸ்ஸலாம் வீதி, ஏத்துக்கால் வீதி, புதிய காத்தான்குடி பிர்தௌஸ் நகர், பதுறியா வீதி உள்ளிட்ட வீதிகள் போக்குவரத்துச் செய்ய முடியாதவாறு வெள்ளத்தில் மூழ்கியிருப்பதுடன் அப்பகுதிகளிலுள்ள வீடுகளிலும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.

மழை காரணமாக காத்தான்குடிப் பிரதேசத்தில் காத்தான்குடி பஸ் டிப்போ வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் புதிய காத்தான்குடி பிர்தௌஸ் வித்தியாலயம் இன்று முழுமையாக இயங்காமல் பூட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, காத்தான்குடி, ஒல்லிக்குளம், பாலமுனை, ஏறாவூர், வெல்லாவெளி, புலிபாய்ந்த கல், கரடியனாறு, கல்லாறு, பெரிய கல்லாறு, களுவாஞ்சிகுடி, சித்தாண்டி, வந்தாறுமூலை உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
.

ad

ad