புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2013



ஜனாதிபதி அலுவலக இணையதளம் : கருணை மனு தகவல் பக்கம் திடீர் நீக்கம் 
ஜனாதிபதி அலுவலக இணையதளத்தில் இருந்து கருணை மனு தொடர்பான பக்கம் நீக்கப்பட் டுள்ளது.

வருங்காலத்தில் கருணை மனுக்கள் தொடர்பான தகவல் களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் பணிகளை மத்திய உள்துறை அமைச்சகம் கையாள உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித் துள்ளது. 
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த ஜூலை மாதம் பதவி யேற்ற பிறகு அவரது அலுவலக இணைய தளத்தில், நிலுவை யில் உள்ள கருணை மனுக்கள், நிராகரிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பான விவரங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டு வந்தது. 
மும்பைத் தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாபின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட தகவல் உடனடியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதேபோல் கடந்த 11-ம் தேதி மனைவி மற்றும் மகளை கொலை செய்த சாய்பன்னா நிங்கப்பா நாட்டிகாரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது வரையிலான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. 
ஆனால், கடந்த 9-ம் தேதி அப்சல் குருவின் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகும் அவரது கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவல் இணையதளத்தில் பதிவு செய்யப்படவில்லை. இதற்கிடையே மேலும் 7 பேரின் கருணை மனுக்கள் ஜனாதிபதியின் இறுதி முடிவுக்காக உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

ad

ad