புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2013



யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜெனமேஜெயந் ஆகிய இருவரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்ற இனிய செய்தியை வெளியிடுகின்றோம் 
வெலிகந்தை புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்த யாழ். பல்கலைக்கழக இரு மாணவர்களும் சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்களை விடுதலை செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளை அடுத்து மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்படி மாணவர்கள் வவுனியாவில் வைத்து விடுதலை செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த இரண்டு மாணவர்கள் பயங்கரவாதத் தடைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் முதல் குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து நான்கு மாணவர்களை பயங்கரவாதத் தடைப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.
ஏற்கனவே இரண்டு மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அண்மையில் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது மாணவர்களின் பெற்றோரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இரு மாணவர்களையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டடார்.
இதன் அடிப்படையில் குறித்த இரண்டு மாணவர்களும் இன்று வவுனியாவில் வைத்து விடுதலை செய்யப்பட்டனர்.

ad

ad