புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2013


யாழ்.அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி கேட்ட கேள்விகள்: திணறிய அதிகாரிகள் 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், பூரணப்படுத்தப்படாத அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் அதிகாரிகளை கேள்வி கேட்டு திணறவைத்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யாழ். வருகையினை முன்னிட்டு அதிகாரிகள் அவசர அவசரமாக அபிவிருத்தி வேலைகளைச் செய்துள்ளனர்.
எனினும், மாவட்டத்தில் பூரணப்படுத்தப்படாத அபிவிருத்தி வேலைகள் குறித்து அதிகாரிகளை கேள்வி கேட்டு திணற வைத்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த.
குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி வேலைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு யாழ்.அரச அதிகாரிகளால் எடுத்துக் கூறப்பட்டது. 
எனினும், கூட்டத்தில் யாழ்.மாவட்டத்தில் ஜணாதிபதி, பூரணப்படுத்தப்படாத அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் படங்களைக் காண்பித்து அரச அதிகாரிகளிடம் விளக்கம் கோரினார்.
அரைகுறை நிலையில் காணப்படும் பாடசாலைக் கட்டடங்கள்,  கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்படாமல் உள்ள கட்டடங்கள், 1989 ஆம் ஆண்டிலிருந்து யாழ். பல்கலைக்கழகத்தில் பூரணப்படுத்தப்படாமல் இருக்கும் குடிதண்ணீர் தாங்கி என்பன படங்களுடன் காண்பிக்கப்பட்டன.
இந்த வேலைகள் ஏன் முடிக்கப்படவில்லை என்றும் வேலை முடிக்கப்பட்ட சில கட்டடங்கள் ஏன் திறக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி எழுப்பிய சரமாரியான கேள்விகளுக்கு அரச அதிகாரிகள் பதிலளிக்கத் திணறினர்.
அதுமட்டுமின்றி, இரண்டு வாரங்களுக்கு முற்பட்ட அபிவிருத்தி நிலைமைகளை ஜனாதிபதி படங்களைப் போட்டுக் காட்டியுள்ளார். பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் தவித்ததாக தெரிவிக்கப்படுகிறது

ad

ad