புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2013

கனடாவில் உறைபனி மழை எச்சரிக்கை



கனடா காலநிலைத் திணைக்களம திங்கள் கிழமை உறைபனி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஒட்டாவா நகரில் உள்ள பாடசாலை பஸ்கள் இன்று பாவனையில் இருக்கின்றன, ஆனால் ஒட்டாவாவிற்கு அருகில்
உள்ள பகுதியில் இருக்கும் பல பாடசாலை பஸ்களஇரத்து செய்யப்படுகின்றன.
ஒன்றாரியோவின் கிழக்குப்பகுதிகளில் இன்று காலை பனித் துகள்கள் ஏற்படுமெனவும் அவைகள் இன்று மாலை உறைபனியாக மாறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. உறைபனியானது 6 மணித்தியாலங்கள்வரை நீடிப்பதற்கான சாத்தியங்கள் தென்படுவதாக காலநிலை அவதானமையம் கூறுகின்றது.
எனவே பாதசாரிகள், வாகனங்களைச் செலுத்துவோர் நடைபாதைகளிலும், வீதிகளிலும் கூடுதலான கவனத்தைச் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
வேறு பல பாடசாலை பஸ்கள் இன்று இரத்து செய்யப்படலாம் எனவும் அதற்கான அறிவித்தல்கள் விடுக்கப்படுகின்றன எனவும் பொதுமக்கள் தத்தமது பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தம்படி கேட்கப்படுகின்றார்கள்.

ad

ad