புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2013

சற்று நேரத்திற்கு முன் வந்த அதிர்ச்சி தகவல்.
---------------------------------------------------------------------
தூக்கில் தொங்கப்போகும் நான்கு தமிழர்களின் உயிர்.

சந்தனக் காட்டு வீரப்பன் உயிரோடு இருந்த போது பாலாற்று கன்னிவெடி நிகழ்த்தப்பட்டது. அதில் பல போலீஸார் இறந்தார்கள். அந்த வழக்கில் சைமன் உள்ளிட்ட நான்கு தமிழகதோழர்கள் மீது வழக்கு பதிவானது. கர்நாடக தடா நீதிமன்றத்தில் விசாரணை.
அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனையை குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு போட்டார்கள். ஒரே ஒரு சாட்சியைத் தவிர போதிய சாட்சிகள் இல்லாத வழக்கு. கர்நாக அரசு ஏதும் சொல்லவில்லை. ஆனாலும் உச்சநீதிமன்றமே சுமோட்டோ அடிப்படையில் இந்த வழக்கை எடுத்து அதிகப்பச்ச தண்டனையாக மரண தண்டனையை விதித்தது. அந்த நால்வரும் ஜனாதிபதிக்கு கருணை மனுவை போட்டிருந்தனர். 

அந்த மனுவை கடந்த 11-ம் தேதி ஜனாதபதி நிராகரித்துவிட்டார். அதற்கான கடிதம் கர்நாடக சிறையில் இருக்கும் அந்த நான்கு தமிழர்களிடமும் இன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனையடுத்து எப்போது வேண்டுமானாலும் அவர்கள் தூக்கிலிடப்படலாம் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இது விஷயமாக கொளத்தூர் மணி தோழரிடம் பேசினேன்.
தகவல் உண்மைதான். ஆனால் கடிதம் கொடுக்கப்பட்ட பிறகு சிறைத்துறை தண்டனை நிறைவேற்றும் தேதியை முடிவெடுக்க முழுதுமான 7 வேலை நாட்கள் இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் நமக்கு சில நாட்கள் இருக்கிறது. அதற்குள் சட்டப்படி தடுக்க என்ன வழி என்ற செயல்பாட்டை தொடங்கியிருக்கின்றோம் தோழர் என்றார்....

ad

ad