புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2013

தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாப் தினமும் கனவில் வருகிறான்: கோர்ட்டில் அபுஜிண்டால் அலறல்
மும்பை தாக்குதல் சதி திட்டம் தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த அபுஜிண்டால் சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு பிடிபட்டான். அவனை அரபிய அரசு இந்தியாவிடம்
ஒப்படைத்தது. டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த அபுஜிண்டாலிடம் மும்பை தாக்குதல் தொடர்பாக தேசிய தீவிரவாத தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்காக மும்பை ஜெயிலில் அபு ஜிண்டால் அடைக்கப்பட்டுள்ளான். அவன் சார்பில் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்யப் பட்டுள்ளது. அதில், 'அபுஜிண்டால் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டதில் இருந்து மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறான். இதற்காக திகார் ஜெயிலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட கசாப் தினமும் அபு ஜிண்டால் கனவில் வந்து செல்வதால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறான். கடுமையான முதுகுவலியும் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கு ஜெயில் தரப்பில் பதில் அளிக்கும் போது ஜிண்டால் நல்ல நிலையில் தான் இருக்கிறான் என்றனர். இதையடுத்து நாளை ஜிண்டாலின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.
அபுஜிண்டால் மீது ஆயுத பதுக்கல் வழக்கு உள்ளது. 2006-ம் ஆண்டு அவுரங்காபாத்தில் ஆயுதம் பதுக்கல் மற்றும் கடத்தல் தொடர்பாக அபு ஜிண்டால் உள்பட 22 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அப்போது டாடா சுமோ, மற்றும் இண்டிகா கார்களில் வெடி மருந்துகள் கடத்தப்பட்டன. அப்போது மராட்டிய தீவிரவாத தடுப்பு படை போலீசார் சுமோ காரை துரத்திச் சென்று மடக்கி நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 30 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்துகள், 10 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 3200 துப்பாக்கி குண்டுகள் ஆகியவை சிக்கியது. 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் இண்டிகா கார் போலீசில் சிக்கவில்லை. அந்த காரை ஓட்டியவன் அபு ஜிண்டால் அவன் போலீசில் சிக்காமல் காரை ஓட்டிச் சென்று விட்டான். மாலேகான் வழியாக ஓட்டிச் சென்று அங்குள்ள கூட்டாளிகளிடம் காரை ஒப்படைத்து விட்டான்.
2006 மே மாதம் போலி பாஸ்போர்ட் மூலம் வங்காள தேசம் வழியாக பாகிஸ்தான் தப்பிவிட்டான். அவனுக்கு பாகிஸ்தானின் லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்பு உள்ளது. அவர்கள் பல வழிகளில் அபு ஜிண்டாலுக்கு உதவி வந்துள்ளனர். இது தொடர்பாகவும் அபு ஜிண்டாலிடம் விசாரணை நடக்கிறது.

ad

ad