புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2013


காணாமல் போனவர்களின் உறவுகள் ஒன்றுகூடி தமது சோகங்களை வெளிப்படுத்தவிருந்த ஜனநாயக ரீதியிலான போராட்ட நிகழ்வை அரசாங்கம் தடுத்து நிறுத்தியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
சுதந்திரத்திற்கான அரங்கு மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமையில் காணாமல் போன உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று புதன்கிழமை
ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அமைதியான போராட்டத்தில் ஆயிரக்கணக்கான காணாமல் போனோரின் உறவுகள் ஒன்றுசேர்ந்து சர்வதேச சமூகத்திற்கு வெளிக்காட்ட இருந்த தமது உறவுகளின் சோகங்களை இந்த அரசாங்கம் தடைசெய்துள்ளது.
வடக்கிலிருந்து நூற்றுக்கணக்கான காணாமல் போனோர்களின் உறவுகள் பஸ்களில் தென்பகுதிக்கு வந்ததை அரசாங்கம் பயம் காட்டி அவர்களை வவுனியாவில் தடுத்து நிறுத்தி தனது அராஜக ஆட்சியை வெளிக்காட்டியுள்ளது.
இந்த அரசாங்கம் ஆணைக்குழுவின் பரிந்துரையின் படி நிறைவேற்றிய ஒரேயொரு பரிந்துரையான ஏ-9 வீதியையும் இன்று மூடிவிட்டுள்ளது. இந்த அரசாங்கத்தில் தான் பிரிவினைவாதிகள், மதவாதிகள் மற்றும் இனவாதிகள் உள்ளனர். எனவே இந்த அரசாங்கத்தை தோற்கடித்து நல்லதொரு ஆட்சியை உருவாக்குவோம்.
இதேவேளை, கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு அரசாங்கம் பதில்கூற வேண்டும். இன்று இப் போராட்டத்தில் கலந்துகொள்ளாத மக்களை நாம் மீண்டும் ஒன்றிணைத்து இப் போராட்டத்தை நடத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad