புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2013


சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் கடற்படையினருக்கு தொடர்பு


சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் கடற்படையினருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த சிலர், சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

சில சட்டவிரோதப் படகுப் பயணிகளுக்கு இலங்கைக் கடற்பரப்பில், கடற்படையினரின் பாதுகாப்பு வழங்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடற்படையினர், காவல்துறையினருக்கும் பணம் செலுத்தியே பயணத்தை ஆரம்பித்ததாக புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முதல் தடவை பயணம் செய்த போது கடற்படையினர் தடுத்து நிறுத்தியதாகவும், இரண்டாம் தடவை பணம் செலுத்தி பயணத்தைத் தொடர்ந்த போது கடற்படையினர் தடுக்கவில்லை எனவும் மற்றுமொரு புகலிடக் கோரிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை கடற்படையினர் நிராகரித்துள்ளனர். இலங்கை அரசாங்கத்திற்கும், கடற்படையினருக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

ad

ad