12 மார்., 2013


இசைப்பிரியா தொடர்பில் கருத்து! இராணுவத்தினரின் சாபக்கேடு ரணிலை சும்மாவிடாது!- பஷில்
இராணுவத்தினரின் சாபக்கேடு ரணில் விக்கிரமசிங்கவை வெறுமனே விட்டுவிடாது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ச தெரிவித்தார்.
நாட்டுக்கு தொடர்ந்து துரோகமிழைக்கும் செயற்பாடுகளிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டு வருகின்றார்.
நாட்டுக்கு எதிராகவும் இராணுவத்துக்கு எதிராகவும் அவர் செயற்படுகின்றார்.
அந்த வகையில் இராணுவத்தினரின் சாபக்கேடு ரணில் விக்கிரமசிங்கவை வெறுமனே விட்டுவிடாது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ச தெரிவித்தார்.
இசைப்பிரியா என்ற பெண் தொடர்பில் அவர் விடுத்துள்ள கூற்றினால் சர்வதேச மட்டத்தில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றை அரசாங்கம் கண்டிக்கிறது.
எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகின்றார் என குறிப்பிட்டார்.
இசைப்பிரியா பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தவறானது என்று அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியதாக தெரிவிக்கப்படும் கூற்று குறித்து அரசாங்கத்தின் சார்பில் கருத்து வெளியிடுகையிலேயே பஷில் ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.