புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2013


தாமதமின்றி உதவித்தொகை வழங்க வேண்டும்! இலங்கை தமிழ் அகதிகள் கோரிக்கை!
கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. இங்கு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம், மன்னார், திரிகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில்
இருந்து அகதிகளாக வந்த 999 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 438 தமிழர்கள் தங்கி உள்ளனர்.

முகாம் பதிவில் உள்ள அகதிகளுக்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாதம் தோறும் 8-ந்தேதிக்குள் அரசு உதவித் தொகை கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள அதற்கான துறை அதிகாரிகளால் வழங்கப்படுவது வழக்கம். 
இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் கடந்த 8-ந்தேதிக்குள் வழங்கப்பட வேண்டிய அரசு உதவித்தொகை இதுநாள் வரை வழங்கப்படவில்லை. 
இதுகுறித்து முகாமை சேர்ந்த அகதி மக்கள் சிலர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கும், அகதிகள் மறுவாழ்வுத்துறை கமிஷனருக்கும் மனு ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- 
முகாமில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் தவறாமல் வழங்கப்படும் அரசு உதவிப்பணத்தை நம்பியே நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இந்த மாதம் (ஏப்ரல்) 8-ந்தேதிக்குள் வழங்கப்பட வேண்டிய அரசு உதவித் தொகை இதுநாள் வரை வழங்கப்படவில்லை. காலதாமதமாகி வரும் அரசு உதவித் தொகையை உடன் வழங்கி முகாமில் உள்ள தமிழ் மக்களுக்கு உதவிட வேண்டுகிறோம். 
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

ad

ad