புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2013


எச்சரிக்கை விடுக்காமல் தென்கொரியாவை அதிரடியாக தாக்குவோம்: வடகொரியா மிரட்டல்

அதே வேளையில், வடகொரியாவின் போர் மிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தென் கொரியா தலைநகர் சியோலில் நேற்று கண்டன பேரணி நடைபெற்றது.வட கொரியா என்ற தனி நாட்டை உருவாக்கிய கிம் இ சுங்-கின் பிறந்த நாள் நேற்று அந்நாட்டின் தலைநகர் பியாங் யாங்-கில்
விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இது, வட கொரியாவின் கோபத்தை மேலும் தூண்டியுள்ளது. வட கொரியா அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த கோபத்தின் கனல் வெளிப்பட்டது.
‘தென் கொரியாவில் உள்ள பொம்மலாட்ட அதிகார வர்க்கத்தின் சார்பில் எங்களை எதிர்த்து நேற்று நடத்தப்பட்ட பேரணி கண்டிக்கத்தக்கது. இந்த நேரத்தில் இருந்து, எவ்வித முன் எச்சரிக்கையும் விடுக்காமல், தென் கொரியா மீது எப்போது வேண்டுமானாலும் வட கொரியா அதிரடியாக தாக்குதல் நடத்தும்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட முயற்சித்து வரும் வேளையில் வட கொரியாவின் இந்த அறிவிப்பு போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

ad

ad