புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2013





         ""ஹலோ தலைவரே...…நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு அ.தி.மு.க.வின் ஆதரவை காங்கிரஸ் மேலிடம் கேட்டிருந்தது பற்றி போன முறை  பேசியிருந்தோம்.''nakkeran

""ஆமாப்பா.. அதற்கு ஜெ.வின் ரிப்ளை என்னங்கிறது தெரியாமலேயே இருந்ததே.''…

""காங்கிரஸ்ங்கிறது தமிழ்நாட்டில் மூழ்கிக் கிட்டிருக்கிற கப்பல்னும் அதிலே ஏறினால் நாமும் மூழ்க வேண்டியதுதான்னும் ஜெ. சொன்னதா சொல்லும் அ.தி.மு.க தரப்பு, காங்கிரஸ் சைடிலிருந்து இன்னொரு  தகவலையும் சொல்லுது. அதாவது, ஜி.கே.வாசனின் சித்தப்பாவான ரங்கசாமி மூப்பனார், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிரா காங்கிரஸ் கட்சி இருக்கிறதால, தமிழர்களின் உணர்வுகளைக் காப்பாற்றும் தேசிய இயக்கமாக மறுபடியும் த.மா.காவை வாசன் தலைமையில் உருவாக்கத்  தயாராக இருக்கோம்னு சொல்லி, வரும்  எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு 5 லோக்சபா  சீட்டும் 1 ராஜ்யசபா சீட்டும்  தரணும்னு கேட்டாராம். அ.தி.மு.க தலைமையோ, அந்தளவுக் கெல்லாம் சீட் தரமுடியாதுன்னும் முதலில் த.மா.கா.வை வாசன் தலைமையில் ஆரம்பிங்க.. அப்புறம் பார்ப்போம்னும் சொல்லியிருக்காம்.''

""வாசனோட ஐடியா என்ன? தனிக்கட்சி தொடங்கும் மனநிலையில்தான் இருக்காரா?''

""அவரோட ராஜ்யசபா எம்.பி. பதவிக்காலம், 2014 ஏப்ரல் மாதத்தோடு முடிவடையுது. காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 5 எம்.எல்.ஏக்கள்தான் இருக்காங்க. அவங்களை வச்சிக்கிட்டு மறுபடியும் ராஜ்யசபா எம்.பி. ஆக முடியாது. அதனால,  சோனியாவின் அரசியல் ஆலோசகரான அகமது பட்டேல் மூலமா, மணிசங்கரய்யருக்கு எம்.பி. பதவி கொடுத் தது போல தனக்கும் வடநாட்டில் உள்ள ஏதாவது ஒரு மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி. பதவி தரணும்னு கேட்டு காய் நகர்த்தியிருக்காரு.''

""காங்கிரஸ் மேலிடத்தின் பதில் என்னவாம்?''

""அதற்கெல்லாம் சான்ஸ் இல்லைன்னு வாசன்கிட்டே சொல்லிட்டாங்களாம். லோக்சபா தேர்தலில் போட்டியிடட்டும்னு ராகுல்காந்தி சொல் றாராம். இப்ப இருக்கிற நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளரா நின்று லோக்சபா எம்.பி.யாவது முடியாத காரியம்னு நினைக்கும் வாசன், தன்னைப் புறக்கணிக்கும் வகையி லேயே ராகுல் தொடர்ந்து இப்படி செயல் படுறாருன்னும் நினைக்கிறாராம். அதனால, ராகுலையும் காங்கிரஸ் மேலிடத்தையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கணும்னா மீண்டும் த.மா.கா.ங் கிற பேச்சை கிளப்பி விடுவதுதான் சரியாக இருக்கும்ங்கிறது வாசனோட கணக்கு. மூப்பனாரோடு த.மா.கா.வில்  இருந்த  சீனியர் லீடர்களோ, அன்றைய அரசியல் சூழ்நிலையே வேறு. அதனால, கட்சி ஆரம்பிச்சதும்  வெற்றி கிடைச்சது. மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றோம். அதன் மூலமா கட்சி நிர்வாகிகளுக்கு கார், பணம்னு கொடுத்து கட்சியை வளர்க்க முடிந்தது. இப்ப  அந்த நிலைமையெல்லாம் இல்லைன்னு சொல்றாங்க. வாசனோ, த.மா.கா.ங்கிற பரபரப்பை உண்டாக்கி ராகுலை வழிக்குக் கொண்டு வர காய் நகர்த்திப் பார்க்கலாம்னு நினைக்கிறார்.'' 

""தமிழக காங்கிரஸ் அரசியலில் என்ன நடக்குதுன்னு நாமும் பார்க்கலாம்ப்பா..''

""தலைவரே… கிரானைட் குவாரி அதிபர் பி.ஆர்.பி மேலே வழக்கு மேலே வழக்கு பாய்வதால இப்ப அவர் தலை மறைவா இருக்காரு.  பி.ஆர்.பி. குடும்பத்தினருக்கும் நெருக்கடி  தொடர்வதால, தலைமறைவா இருந்தபடியே  தனக்கு நெருக்கடி  கொடுக்கிறவங்களுக்கு நெருக்கமானவங்க கிட்டே பி.ஆர்.பி. பேசியிருக்காரு. அப்ப அந்தத்  தரப்பு, 2001-ல் இதேபோல  எங்க ஆட்சியிலதான் நீங்க வேலையே செய்யாம உங்களுக்கு 1 கோடி ரூபாய் பில்லை க்ளியர்  பண்ணினோம். அதனாலதான் நீங்க தொழிலில் வளர்ந்தீங்க. இன்னைக்கு எங்கேயோ போயிட்டீங்க. உங்க ஃபேக்டரியை கொடுத் திடுங்க, எல்லாம் சரியாயிடும்னு சொல்லியிருக்காம்.''

""பி.ஆர்.பி. என்ன சொல்றாராம்?''

""இப்ப அவரோட ஃபேக்டரியின் மதிப்பு 1500 கோடி ரூபாய். அவ்வளவு பெரிய ஃபேக்டரியை அப்படியே கொடுக்க அவர் ரெடியா இல்லை. என் தொழிலில் தப்பு பண்ணி யிருந்தா, ஃபைன் போட்டுக்குங்கன்னு சொல்றாராம். ஃபேக்டரியை தரமறுக்கும் பி.ஆர்.பி மேலே அடுத்த வழக்கு ரெடியாகுது. அதாவது, அவர் ஏற்றுமதி செய்த கற்களுக்கு நடுவே பிளாஸ்டிக் பைப்பில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட ஹெராயின், ப்ரவுன் சுகர் ஆகிய போதை வஸ்துகளை இத்தாலி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கடத்தினார்னு வழக்குப்போடும் திட்டம் நடந்துக்கிட்டிருக்கு. இதுபோல, இன்னும் பல வழக்குகளும் அடுத்தடுத்து பாயுமாம்.'' 

""தி.மு.க. ஏரியாவில் என்ன நடந்துக்கிட்டிருக்கு?''

""செயற்குழுவில் தொண்டை வலி காரணமாக  கலைஞர்  பேசலை. பேராசிரியர்தான் பேசினார். மத்தி யில் உள்ள ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. அதற்குத் துணை  போகமாட் டோம்னு அவர் சொன்னதால, கலைஞரோட குரலைத்தான் பேரா சிரியர்  ஒலிக்கிறார்னும், தி.மு.க. மறு படியும் காங்கிரசோடு சேர்ந்துகொள் ளும்னும் தகவல்கள் பரவ ஆரம்பிச்சிது. ஏற்கனவே தி.மு.க.வில் ஒரு சிலர் காங்கிரசை ரொம்ப பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துப்  போகலாம்ங்கிற மனநிலை யில் இருக்கிறதால தலைமையின் முடிவும் இதுதானோன்னு குழப்பம் உருவாயிடிச்சி. தி.மு.க. பேச்சாளர்களோ என்ன லைன் எடுப்பதுன்னு தெரியாமல் குழம்பிக்கிட்டி ருந்தாங்க.'' 

""கலைஞரின் உடல்நிலை காரணமா, பேச்சாளர்கள் கூட்டமும் ரத்தாயிடிச்சே.''…

""ஆமாங்க தலைவரே.. அதனால அவங்க ரொம்ப குழப்பத்தில் இருந்தாங்க. தி.மு.க.வின் நிலைப்பாடு பற்றி வெவ்வேறு விதமான செய்திகள் பரவுவதை அறிந்த கலைஞர், வெளியி லிருந்து ஆதரவு என்பது உள்பட எந்த ஆதரவும் மத்திய அரசுக்கு கிடையாது என்பதை தெளிவுபடுத்தி அறிக்கை வெளியிட்டதோடு அதில், இலங்கையில் நடந்த இனப்படுகொலை-போர்க் குற்றங்கள் பற்றி விசாரணை நடத்த சுதந்திரமான பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்தியில் எந்த ஆட்சி அமைந் தாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடுன்னு சொல்லிட்டாரு. இதையடுத்து, தி.மு.க. பொதுக் கூட்டங்களில்  தலைமைக் கழகப் பேச்சாளர்கள், காங்கிரசை பொளந்து கட்டிக்கிட்டிருக்காங்க.''

""மதுரையில் ஏற்கனவே ஒரு பொதுக்கூட்டத்தைத் தவிர்த்த தி.மு.க சீனியர் துரைமுருகன் இப்ப அங்கே போய் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்காரே?''

""மு.க.அழகிரி விவகாரத்தால் தான் போன முறை பொதுக் கூட்டத்தைத் தவிர்த்தார் துரை முருகன். இப்ப தலைமைக் கழகம் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டதோடு, அழகிரி யையும் சந்தித்துப் பேசி, அவரை அழைச்சிக்கிட்டு மதுரை மீனாட்சி யம்மன் கோயில் அறங்காவலர் கருமுத்து தியாகராசனோட அம்மா மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். துரைமுருகனை ஏர்போர்ட் வரைக்கும் சென்று வழியனுப்பி வைத்தார் அழகிரி.''

""அரசியல் பற்றி என்ன பேசி னாங்களாம்?''

""மு.க.ஸ்டாலின்தான் கட்சிக்கு அடுத்த தலைவர்ங்கிறது உறுதியாயிடிச்சி. அதற்கு குறுக்காக நான் நிற்கலைன்னு சொன்ன அழகிரி, மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்குவது பற்றி என்கிட்டே ஒரு வார்த்தைகூட சொல்லலை. நான் தென்மண்டல அமைப்புச் செய லாளரா இருக்கிறேன். என்னை கட்சித் தலைமை மதிக்கலை. அது போல, ஸ்டாலின் குடும்பத்தினர் எங்க குடும்பத்தை மதிக்கிறதில்லை. அவங்களை மரியாதை கொடுக்கச்  சொல்லி, சுமூகமான நிலைமையை  உருவாக்கச் சொல்லுங்க. எந்தப் பிரச் சினையும் இருக்காது. இதுதான் ஸ்டாலினை ஆதரிக்க  நான் விதிக்கும் நிபந்தனைன்னும் அழகிரி சொல்லியிருக்காராம்.''
""ம்...'' 

""ஏர்டெல் சுனில் மிட்டலுக்கு சம்மன் அனுப்பப்பட்டதே, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்குது?''

""அவரைக் காப்பாற்றுவதற்காக பிரதமர் அலுவலகம், சட்ட அமைச்சகம், நிதி மந்திரியின் அலுவலகம்னு வலுவான மையங்களிலிருந்து பல முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை தொடங்கியிருக்கு. இத்தனை பவர்ஃபுல்லான சுனில் மிட்டலுக்கே இந்த கதியான்னு, 2ஜி வழக்கில் இன்னும் கைது  நடவடிக்கையை சந்திக்காமல் தப்பித்து வரும் தமிழகப் புள்ளி பயத்தில் உறைந்து போயிருக்காராம்.'' 

""மா.செ பதவி பறிக்கப்பட்ட மாநில  மந்திரி பச்சைமாலும்  அதிர்ச்சியில் உறைந்து போயிருக்காராமே!''

""அவர் பாட்டுக்கு வீட்டில் உட்கார்ந்து டி.வி.யில் எம்.ஜி. ஆர்-ஜெயலலிதா பாடல் காட்சிகளைப்  பார்த்துக் கிட்டிருந்திருக்கிறார். அப்பதான் அவரோட ஆட்கள் ஓடிவந்து, மா.செ. பதவி நீக்கம் பற்றி சொல்லியிருக்காங்க. உடனே நியூஸ் சேனலுக்கு மாறியிருக்காரு. அவரையும் அவரோட ஆதரவாளர்கள் 8 பேரையும் ஜெ. நீக்கிய விவரம் ஓடிக் கிட்டிருந்திருக்கு. அவரோட ஆதரவாளர் களோ கொஞ்ச நேரத்தில் புது மா.செ. நாஞ்சில் முருகேசன் வீட்டுக்குப் போயிட் டாங்க.''

""தன்னை அரசியலிலிருந்து ஓரங்கட்டிய பச்சைமாலை ஓரங்கட்ட முன்னாள் அமைச்சர் தளவாய்  சுந்தரம்தானே ஓயாமல் வேலை  பார்த்துக்கிட்டிருந்தாரு.''…

""ஆமாம்.. ஆனா, நாஞ்சில் முருகேசன்தான் ஜெ.கிட்டே பச்சைமால் பற்றி ஒரு பெரிய ஃபைலையும் சி.டியையும் கொடுத்துட்டு வந்திருக்காரு. அதில், ஏற்கனவே நீக்கப்பட்ட பச்சைமாலின் உதவியாளர் சகாயம் இன்னமும் கட்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடுவது பற்றியும் மந்திரியின் மனைவியும் இதில் தலையிடுவது பற்றியும் அதில் டீடெய்லா இருந்திருக்கு. இதையடுத்துதான் பச்சைமாலின் மா.செ. பதவி பறிக்கப்பட்டிருக்கு. புது மா.செ. நாஞ்சில் முருகேசன் விரைவில் சைரன் வச்ச காரில் போவார் பாருங்கன்னு அவரோட ஆதர வாளர்கள் சொல்றாங்க.''

""கூட்டுறவு சங்கத் தேர்தல் ஜனநாயகத் துக்கு விரோதமா நடக்குதுன்னு சொல்லி தி.மு.க புறக்கணிச்சிடிச்சி. தேர்தலில் பங்கேற்க நினைச்ச சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சியினருக்கு நாமினேஷன் படிவம் கொடுக்காமல் ஆளுங் கட்சியே எல்லா போஸ்ட்டிங்குகளையும் அபகரிப்பதால அவங்களும் இப்ப எதிர்ப்பு அறிக்கைகள் விட்டுக்கிட்டிருக்காங்க.''

""அதே துறை தொடர்பா நான் ஒரு தகவல் சொல்றேன். கிளார்க் போஸ்ட்டுக்கு 4 எல், அக்கவுண்டன்ட்டுக்கு 5 எல், பியூனுக்கு 2 எல்-னு 650 போஸ்டிங்குகளுக்கு மாண்புமிகுவோட உதவியாளர்  மூலமா கலெக்ஷன் பண்ணி, இரண்டு மாசமா இன்டர்வியூவும் நடந்துக்கிட்டிருந்தது. ஆனா, கலெக்ஷன் தொகைங்கிறது மேலிடம் சொன்ன டார்க்கெட்டை எட்டலையாம். அதனால மாண்புமிகு தரப்பே கேஸ்போட்டு, இந்த  நியமனங்களுக்கு ஸ்டே வாங்கிட் டாங்க.  வசூல்  தொகையும் கச்சிதமா திருப்பிக் கொடுக்கப்பட்டு வருதாம். திரும்ப டார்க்கெட்டை  அதிகப்படுத்தி, அதற்குத் தகுந்தபடி கலெக்ஷன் செய்து இன்டர்வியூ நடத்துவதுதான் அடுத்த திட்டமாம்.''

 லாஸ்ட் புல்லட்!

சட்டமன்றத்தில் இலங்கைப்பிரச்சினை தொடர்பான தீர்மானத்தின் போது  தி.மு.க வெளிநடப்பு செய்தது என பழ.நெடுமாறன் குற்றம்சாட்ட,  தி.மு.கவினர் வெளியேறினார்களா- வெளியேற்றப்பட்டார்களா என்ற  வித்தி யாசம் தெரியாமல் குற்றம்சாட்டுவதா என்று கலைஞர் அறிக்கை வெளியிட்டி ருந்தார். மத்திய அரசிலிருந்து விலகுவதாக தி.மு.க முடிவெடுத்த நிலையில் கலைஞருக்கு போன் செய்து, நல்ல முடிவு என்று சொன்ன நெடுமாறன், வெளி அரசியலுக்காக இப்படி பேசுவது ஏன் என்கிறது கலைஞர் தரப்பு.

நேரு தம்பி ராமஜெயம் சிலை திறப்புவிழாவின் போது ஏகப்பட்ட கூட்டம். வந்திருந்த கட்சிக்காரர்கள் பலரும், கொலை நடந்தபோது அவரைப் பற்றி பல தகவல்கள் பரவின. ஊருக்கு அவர் செய்திருக்கும் நன்மையால்தான் கட்சிக்காரர்கள்  மட்டுமின்றி பொதுமக்களும் திரண்டிருக்கிறார்கள் என்று பேசிக்கொண்டனர். கொலை நடந்து ஒரு வருடமாகியும் யாரும் கைது செய்யப்படாததால், போலீசுக்கு தெரிந்தே இந்த கொலை  நடந்திருக்க வேண்டும் என்றும், அல்லது போலீஸ் தரப்பிலிருந்தே இது நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் பேச்சு பரவிவருகிறது.

ஈழப்பிரச்சினையில் நாடகம் என தி.மு.க.வை அ.தி.மு.க.வும், அ.தி.மு.க.வை தி.மு.க.வும் மாறி மாறி வசைபாடி வரும் நேரத்தில், விடுதலைப்புலிகள்  அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த நடேசன் இறுதி யுத்தகாலத்தில் ஜெ.வைப் புகழ்ந்து அவரிடம் உதவி கேட்டு  எழுதிய கடிதத்தை இப்போது  வெளியிடலாமா என அ.தி.மு.க.வும் அதனை ஆதரிக்கும் லோக்கல்  ஈழ ஆதரவுத்  தலைவர்களும் ஆலோசித்து வருகிறார்களாம்.

ad

ad