புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2013


மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் மீன்களும் விமானநிலையத்தில் குருவிகளுமே பிடிபடுகின்றன : அசாத் சால


உலக நாடுகளிடம் கடன் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்வதாகக் கூறப்படுகின்ற நிலையில் தென்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் குருவிகளும் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச துறைமுகத்தில் மீன்களுமே பிடிக்கப்படுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி தெரிவித்தார்.

கொழும்பு பான்ஸ் பிளேஸில் அமைந்துள்ள அசாத் சாலி மன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டை உலக நாடுகளிடம் கடன் எடுத்து அபிவிருத்தி செய்வதாக அரசாங்கம் கூறித்திரிகின்றது. ஆனால் நாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சர்வதேச துறைமுகத்தில் மீன்களும் சர்வதேச விமான நிலையத்தில் குருவிகளுமே பிடிக்கப்படுகின்றன. இது மிகவும் வேடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் உலக நாடுகளிடமிருந்து பெற்ற கடனுக்கு நாட்டு மக்களுக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை. நல்லவிதமான அபிவிருத்திகளும் இல்லை. ஒவ்வொரு நாட்டுப் பிரஜையும் கடனாளியாக்கப்பட்டதோடு பிறக்கின்ற குழந்தைகளும் கடனாளியாக்கப்படுவது தான் மிச்சம் என அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad