புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2013




          துரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட சில கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித் திருந்தார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். இதையறிந்த மறைந்த காஞ்சி சங்கரமட பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், "நான் கணேசனைப் பார்க்கணுமே' எனச் nakeeranசொன்னார்.

அதன்படி பெரியவரைப் பார்க்கப் போயிருந்தார் சிவாஜி. அப்போது தீப வெளிச்சத்தில் இருந்தபடிதான் பெரியவர் அருளாசி வழங்கி வந்தார். சிவாஜி உள்ளே சென்றதும்... நெற்றியில்  சன்ஸேடு போல் கையை வைத்து உற்றுப் பார்த்து... "யாரு கணேசனா?' எனக் கேட்டு அழைத்துப் பேசி, ஆசிர்வாதம் செய்து அனுப் பினார் பெரியவர்.

அதன்பிறகு ஒரு நாள் பெரியவர் வெளியூர் கிளம்பிய போது... வழியெங்கும் போஸ் டர்கள். "எதுக்கு எனக்கு போஸ்டரெல்லாம் போட்டி ருக்கீங்க?' என பெரியவர் கேட்க... "அது சிவாஜிகணே சன் நடிச்ச "திருவருட்செல் வர்' சினிமா போஸ்டர்' என அருகிலிருந்தவர்கள் விளக்கிச் சொல்ல... வியந்துபோனார் பெரியவர்.

பெரியவர் வியக்கும்படி சிவாஜி போட்டிருந்த அந்த வேஷம்... அப்பர்  வேஷம்.

பெரியவர் நெற்றியில் கை வைத்து தன்னைப் பார்த்த அந்த உடல்மொழியை அப்படியே "அப்பர்' கேரக்டரிலும் புகுத்தினார் சிவாஜி.

இப்படி... பெருமைக்குரிய சிவாஜியின் "அப்பர்' வேஷத்தை "கில்லாடி' படத்திற்காக விவேக் போட்டிருக்கிறார்... எனச் சொல்லி சிவாஜி ரசிகர்கள் டென்ஷனாக, பிரபுவும் விவேக்கை தொடர்புகொண்டு தன் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

""பாளையத்து அம்மன் படத்தில் சிவாஜியின் "பராசக்தி' நீதிமன்ற காட்சி வசனத்தை கிண்டலடித்து நடித்திருந்தார் விவேக். அப்போதே நாங்கள் விவேக்கை கண்டித்தோம். "இனிமேல் அப்படி நடக்காது' எனச் சொன்னார் விவேக். இப்போது "திருவருட்செல்வர்' படத்தில் திருநாவுக்கரசர் எனும் அப்பர் பெருமானாக சிவாஜி வாழ்ந்து காட்டிய கெட்-அப்பை "கில்லாடி' படத்தில் விவேக் போட்டுக்கொண்டு கிண்டல் காட்சிகளில் நடித்திருக்கிறாராம். "அப்பர்', "வீரபாண்டிய கட்டபொம்மன்' போன்ற கேரக்டர்களை சிவாஜி மட்டுமே செய்திருக்கிறார். அப்படிப்பட்ட வேஷங்களை கேலி செய்து மாபெரும் கலைஞனான சிவாஜியை சிறுமைப்படுத்தக்கூடாது. அந்தக் காட்சிகளை நீக்கிவிட்டுத்தான் "கில்லாடி' படத்தை திரையிட வேண்டும். இனியும் சிவாஜி வேஷங்களை கிண்ட லடிக்கும் போக்கு தொடர்ந்தால் சம்பந்தப்பட்டவர்களுக் கெதிராக கடும் போராட்டம் நடத்துவோம்'' என எச்சரிக்கிறார் சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் கே.சந்திரசேகரன்.

இந்நிலையில் விவேக்கை தொடர்புகொண்ட பிரபு, "ஏன், இப்படி தொடர்ந்து அய்யா போட்ட வேஷங்களை கிண்ட லடிக்கிறீங்க?' என கடிந்துகொள்ள... "அது ஒரு சாமியார் வேஷம்தான்' என விவேக் சொல்லியிருக்கிறார். ஆனால் விவேக்கின் சமாதானத்தை பிரபு ஏற்கவில்லை. 

இதையடுத்து, "கில்லாடி' படத்தின் டைரக்டர் ஏ.வெங்கடேஷ், பிரபுவை தொடர்புகொண்டு "படம் ரிலீசுக்கு முன்னாடி போட்டுக் காட்டுகிறோம்ணே' எனச் சொல்லியிருக்கிறார். 

சமீப காலமாகவே நகைச்சுவை என்ற பெயரில் சினிமா ஜாம்பவான்களின் சினிமா கேரக்டர்களை கேலி செய்யும் போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்தபடியே இருக்கிறது.

நூறு வயது நெருங்கும் இந்தியச் சினிமாவில் மிக முக்கியமான படமாக கருதப்படும் "நாயகன்' படத்தில் கமல் ஏற்ற "வேலு நாயக்கர்' பாத்திரத்தை சமீபத்தில் "ஒன்பதுல குரு' எனும் படத்தில் கேவலப் படுத்தியிருந்தார்கள்.

"உயரிய கதாபாத்திரங்களை பத்துப் பாத்திரங்கள் போல் அலட்சியம் செய்யும் போக்கை நடிகர் சங்கம் தலையிட்டு நிறுத்த வேண்டும்' என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பு.

-இரா.த.சக்திவேல்

ad

ad