புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2013


செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 15 பேர் நள்ளிரவில் விடுதலை
கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.லக்சிறி விஜியசிங்க தெரிவித்தார்.
முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழ் உறவுகளை நினைவுகூரும் முகமாக மன்னார் பெரியகடை பொதுமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி கூட்ட நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட 9 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன் போது செய்தி சேகரிக்கச் சென்ற மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் ஜோசப் பெணாண்டோவும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வந்த நிலையில் அங்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் கைது குறித்து பொலிஸாரிடம் கேட்டார்.
சட்டவிரோதமான முறையில் கூட்டம் நடத்தப்பட்டமை, தமிழின படுகொலை என எழுதப்பட்ட பெனர் கூட்டத்தில் வைக்கப்பட்டமை, மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் போட்டோ பிரதி வைத்திருந்தமை தொடர்பான குற்றத்திற்காகவே தாம் அவர்களை கைது செய்துள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.லக்சிறி விஜியசிங்கம் தெரிவித்திருந்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உற்படுத்தப்பட்டு வந்த நிலையில் அவர்களில் 6 பெண்களையும் நேற்று (18) இரவு 7 மணியளவில் விடுதலை செய்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் ஊடகவியலாளர் ஜோசப் பெர்ணாண்டோ உற்பட 9 பேர் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உற்படுத்தப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் 9 பேரும் மன்னார் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டனர்.
இரவு 9 மணியளவில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் புலனாய்வுத்துரையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உற்படுத்தப்பட்டருந்தனர்.

ad

ad