புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2013


ஐதராபாத் அணியை தோற்கடிக்க காம்பீரிடம் கேட்பேன்: விராட் கோலி

இதனால் இவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. ஆட்டநாயகன் விருது பெற்ற கோலி கூறியதாவது:-பெங்களூரில் நடைபெற்ற சென்னை அணிக்கு
எதிரான போட்டியில் பெங்களூர் 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு 29 பந்தில் 4 சிக்கர், 6 பவுண்டரியுடன் 56 ரன் குவித்து விராட் கோலி முக்கிய பங்கு வகித்தார்.
இந்த வெற்றி இன்று கொல்கத்தா அணியுடன் மோதும் ஐதராபாத் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். 80 ரன்கள் எடுக்க வேண்டும் என்று எங்களுக்குள்ளே பேசிக்கொண்டோம். ஆனால் அதற்கு மேல் 20 ரன்கள் கிடைத்தது. அதிரடியாக விளையாடுவதற்கு முன் நானும், கெய்லும் 4 அல்லது 5 பந்துகளை வீணடிக்க வேண்டியிருந்தது. ஜாகீர்கான் சிறப்பாக பந்து வீசினார். இன்று காலை தனிப்பட்ட முறையில் காம்பீருக்கு போன் செய்து எங்களுக்காக ஐதராபாத் அணியை தோற்கடிக்க கேட்டுக்கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி குறித்து சென்னை அணியின் டோனி கூறியதாவது:-
8 ஓவருக்கு 107 ரன் என்பது மிகவும் கடினமானது. வீராட் கோலி மற்றும் கெய்லின் அதிரடிக்குப் பிறகு அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் திறமையாக பந்து வீசினார்கள். பிளே-ஆப் சுற்றின் முதல் போட்டியிலேயே வெற்றி பெற விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூர் அணி 16 லீக் போட்டியில் விளையாடி 9 வெற்றிகள் பெற்று 18 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணி 15 போட்டிகளில் 9 வெற்றிகள் பெற்று 18 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் இன்று கொல்கத்தா அணியுடன் இன்று விளையாடுகிறது.
இதில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். மாறாக தோல்வியடைந்தால், அந்த அணியும் பெங்களூர் அணியும் சம புள்ளிகளுடன் இருக்கும். ரன் ரேட் அடிப்படையில் ஐதராபாத் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

ad

ad