புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2013



               டைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் நடந்த சூதாட்டங்கள் தொடர்பான புலன் விசாரணையை டெல்லி, மும்பை, சென்னை என மூன்று மாநில போலீசார் தனித்தனியாக விசாரித்து வந்தனர். தனித்தனி எஃப்.ஐ.ஆர்.கள், கைதுகள், ரெய்டுகள் என
இந்தியா முழுவதும் கொச்சி முதல் டெல்லி வரை நடந்த புலன் விசாரணை அனைத்தும் திடீரென சென்னையை நோக்கி திரும்பியுள்ளது.

அனைத்து விசாரணைகளின் குறி சென்னை சூப்பர் கிங்ஸின் உரிமையாளர்களான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் மற்றும் அவரது மருமகனான குருநாத் மெய்யப்பனை நோக்கி பாய்ந்ததால் உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

""பின்ன என்ன சார், சீனிவாசன் கிரிக்கெட் உலகில் சாதாரண ஆளா? இன்றைய நிலையில் உலக கிரிக்கெட்டின் முதுகெலும்பே சீனிவாசன்தான். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் ஓனர் மட்டுமல்ல, தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய கிரிக்கெட் அசோசியேஷன்களின் தலைவர். அடுத்ததாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகப் போகிறவர். அவர் ஐ.பி.எல். சூதாட்டத்தில் பங்கு பெற்றாரா? ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கொட்டும் இந்தியா சிமெண்ட்ஸ் கம்பெனி அதிபர். அவரோ அவரது உறவினர்களோ இதுபோன்ற சூதாட்டத்தில் ஈடுபடுவார்களா?'' என ஆச்சரியப்படுகிறார் கள் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசும் நடுத்தர மக்கள்.



சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதிய போட்டிகளில் சூதாட்டம் நடை பெற்றது என முதலில் சொன்னது தலை மறைவாக இருந்து பின் சென்னையில் போலீசாரிடம் சரணடைந்த சூதாட்டக் காரரான பிரஷாந்த் பால்தான்.

""எங்களுக்கு வேறு தொழில் எதுவும் தெரியாது. வருடத்தின் 365 நாட்கள் இந்த சூதாட்டத்தில்தான் ஈடுபடுகிறோம். நான் எனது நண்பர் சஞ்சய் பாவ்னா இருவரும் நடுத்தர சூதாட்டத் தரகர்கள், எங்களை விட பெரிய தரகரான கிட்டி (எ) உத்தம் என்பவரிடம் நாங்கள் வசூலிக்கும் பெட்டிங் பணத்தை தருவோம். அவர் டெல்லியிலுள்ள அஹுஜாவிடம் தருவார். இதுதான் எனது நெட்வொர்க். முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி போன்ற வி.ஐ.பி.கள் எங்களிடம் பணம் கட்டியுள்ளார்கள். என்னைப் போல பல தரகர்கள் கிட்டி, அஹுஜா போன்ற பல்வேறு புக்கிகளுடன் தொடர்பு கொண்டு சூதாட்டம் நடத்தி வருகிறார்கள். 

இந்த ஐ.பி.எல். சீசனில் மட்டும் சுமார் 1500 கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் பெட்டிங் நடந்துள்ளது. அதிலிருந்து எங்களுக்கு பர்சன்டேஜ் அடிப்படையில் கமிஷன் கிடைக்கும். அதிலும் குறிப்பாக தமிழக அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் விளையாட்டு களுக்கு அதிகமாக பெட்டிங் தமிழகத்தில் நடக்கும்'' என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீது போலீசாரின் கவனத்தைத் திருப்பினார் பிரஷாந்த்.

இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய விளையாட்டுகளில் தான் பெட்டிங் இடம்பெற்றது என நம்பியிருந்த போலீசார் சென்னையுமா? என வியப்படைந்தார்கள்.

""ஆமாம் சார் சீனிவாசனின் சென்னையும், அம்பானியின் மும்பையும் கடந்த ஐந்தாம் தேதி மோதின. அதுவரை சென்னை அணி ஆடிய பதினோரு ஆட்டங் களில் ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு வெற்றிக்கு 2 புள்ளி என 18 புள்ளிகளை பெற் றிருந்தது. அதேநேரம் மும்பை அணி மே-1ம் தேதி ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியுடன் மோதிய போட்டியில் தோல்வியடைந் திருந்தது. அதனால் வெறும் பத்து புள்ளிகளுடன் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு சமமாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்சுடன் மோதிய போட்டியில் ஜெயித்தால்தான் மும்பை அணி முன்னேற முடியும் என்ற இக் கட்டான நெருக்கடியில் மும்பை அணி தவித்துக் கொண்டிருந்தது.

அந்த போட்டியில் சென்னை அணிதான் வெற்றி பெறும் என தமிழக ரசிகர்கள் அதிகமாக பெட் கட்டியிருந்தனர். மும்பை அணி ஜெயிக்கும் என ஒரு சிலர்தான் பெட் கட்டியிருந்தனர். 

அந்த மேட்சில் மும்பை வீரர் கெரோன் போலார்ட் தொடர்ந்து மூன்று முறை சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸி கொடுத்த கேட்ச்களை தவறவிட்ட பிறகும் வெறும் 74 ரன்களில் சென்னை அணி சுருண்டு விட்டது. ஐ.பி.எல். வரலாற்றிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையில் சுருண்ட அணி சென்னை அணிதான். இந்த தோல்வியால் எங்களுக்கு 350 கோடி ரூபாய் லாபமாக இந்த ஒரு போட்டியிலேயே கிடைத்தது என சொல்லி அதிர வைத்தார் பிரஷாந்த்.

சென்னையில் பிரஷாந்த் சொன்னது உண்மைதான் என மும்பையில் கைதான ரமேஷ் வியாஸ் வாக்குமூலம் உறுதி செய்தது. ""சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனோடும் பாலிவுட்டின் பிரபல நடிகரான தாராசிங்கின் மகனான விண்டு தாராசிங்கோடும் மிக நெருக்கமாக தொலைபேசியில் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பேன். விண்டு பாலிவுட்டில் உள்ள பிரபல நடிகர்கள் சூதாட்டத்தில் கட்டும் பணத்தை என்னிடம் தருவார். குருநாத் மெய்யப்பன் போட்டியின் முடிவுகளை எங்கள் பெட்டிங்குக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பார். 

இதனால் எங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் லாபம் வரும். குருநாத்தும், கேப்டன் தோனியும் கோச் ஸ்டீபன் பிளமிங்கும் சேர்ந்துதான் சென்னை சார்பாக யார் யார் களமிறங்குவார்கள் என முடிவு செய்வார்கள். அந்த முடிவுகள் எனக்கு உடனடியாக தெரிந்துவிடும். உதாரணத்திற்கு மே 5-ஆம் தேதி லாஃப்லின் என்ற புதிய தொடக்க ஆட்டக்காரரை சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறக்கியது. இந்தத் தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட நான் இந்த மேட்சில் முரளி விஜய் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கவில்லை எவ்வளவு பெட் என கோடிக்கணக்கில் சம்பாதித்தேன்'' என்கிறது ரமேஷ் வியாஸின் வாக்குமூலம்.

விண்டு தாராசிங்கும் ""குருநாத் எனக்கு  நெருங்கிய நண்பர், நான் சென்னை விளையாடும் மேட்சுகளை பார்க்க சென்னை சூப்பர் கிங்ஸுக்கு சொந்தமான ஜெட் விமானங்களில் பறப்பேன். குருநாத்திற்கு சொந்தமான சொகுசு கப்பலில் தோனியின் மனைவி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுடன் தண்ணி பார்ட்டியில் கலந்து கொண்டேன். கடந்த ஒரு வருடமாக எனக்கு கிரிக்கெட் சூதாட்டம்தான் தொழில். குருநாத் உள்ளிட்ட அணியின் உரிமையாளர்கள் மூலம் மேட்சுகளின் முடிவுகளை மாற்று வோம்'' என்று வாக்குமூலம் தந்திருக்கிறார்.

ரமேஷ் வியாஸும் விண்டு தாராசிங்கும் சொன்ன தகவல்கள் உண்மையா என இரண்டுபேரின் செல்ஃபோன் கால் ரிக்கார்டுகளை மும்பை போலீசார் ஆராய்ந்தனர். இந்த இருவரிடமும் மும்பை- சென்னை மேட்ச் நடந்தபோது பலமுறை குருநாத் பேசியிருக்கிறார் என்றும் கண்டுபிடித்தனர். உடனே குருநாத்தை விசாரணைக்கு அழைத்தனர். குருநாத் வரவில்லை. அதனால் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

குருநாத் மட்டுமே முடிவு செய்தால் ஒரு மேட்சின் முடிவு மாறுமா? அதற்கு அணியின் முக்கியமான முடிவுகளை எடுக்கும் சீனிவாசனின் சம்மதம் தேவைப்படாதா? மும்பை சென்னை மோதிய போட்டியில் மிக மோசமாக சென்னை தோற்றதன் பின்னணியில் என்னதான் நடந்திருக்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வட்டாரங்களில் விசாரித்தோம். ""சீனிவாசனுக்கும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி உரிமையாளர் கலாநிதிமாறனுக்கும் ஒருவிதமான ஈகோ சண்டை உண்டு. மே-1ஆம் தேதி ஹைதராபாத்திடம் தோற்றதால் அந்த அணிக்குச் சமமாக பத்து பாயிண்டுகளுடன் இருந்த மும்பை அணி, சென்னையுடன் நடக்கும் போட்டியிலும் தோற்றுவிட் டால் அந்த அணி பாயிண்ட் கணக்கில் சரிந்துவிடும். ஹைதராபாத் அணி முந்திவிடும். ஹைதராபாத் அணி முந்திவிடக் கூடாது என்பதற்காக சென்னை அணி தோற்க வேண்டும் என குருநாத் சொன்னதை சீனிவாசன் கேட்டிருப்பார்'' என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

பள்ளிப்படிப்பை கூட முடித்திராத குருநாத், அவரது மனைவி, சீனிவாசனின் மனைவி, சீனிவாசன் ஆகியோர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர்கள் என அவர்களது அடையாள அட்டையைக் காட்டும் கிரிக்கெட் வல்லுநர்கள், குருநாத் பற்றி ஒரு பழைய சம்பவத்தையும் சுட்டிக் காட்டுகிறார்கள். சீனிவாசன், குரு நாத்தை மிகவும் சுதந்திர மாக இயங்க வைத்தார். அடிப்படையில் கார் புரோக்கரான குருநாத் ஏழு வருடங்களுக்கு முன்பு சீனி வாசனுக்காக பி.எம்.டபிள்.யூ என்கிற வெளிநாட்டு காரை வாங்கினார். அதில் பல லட்சம் மோசடி செய்தார் என சீனி வாசனே வருத்தப்பட்டதாக சொல்கிறார்கள்.

குருநாத், சீனிவாசனை ஏமாற்றினாரோ இல்லையோ இவர்கள் நடத்தும் மேட்சுகள் எல்லாம் உண்மையான மேட்சுகள் என நம்பி காசு கொடுத்தும், டி.வி. முன்பும் உட்கார்ந்து பார்த்த கோடிக்கணக்கான ரசிகர்கள் நெத்தியில் நாமம் போட்டு ஏமாற்றிவிட்டார்கள் என்கிறார்கள் ஐ.பி.எல்.லுக்கு தடை வேண்டும் என வழக்கு போட்டவர்கள்.

-தாமோதரன் பிரகாஷ்




ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் பிரபல நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர்களையும் விசாரணை வளை யத்துக்குள் கொண்டு வருவோம் என்கிறது சி.பி.        சி.ஐ.டி. போலீஸ். இதனால் பிரபல நடிகைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸின் தூதராக நியமிக்கப்பட்டவர் நடிகர் விஜய், இவருக்கு ஜோடியாக நயன்தாராவைச் சேர்த்தனர். இவர்களை அழைத்து வந்தது சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன். 

ஒரு விருந்தின் போது, குருநாத்துக்கும் நயன்தாராவுக்கும் மோதல் நடந்ததால் ஐ.பி.எல்.லில் இருந்து விலகிக் கொண்டார் நயன்தாரா. இருவருக்கும் ஏன் மோதல் நடந்தது? வீரர்களுடன் நெருக்கமாக இருக்க நயன்தாரா வலியுறுத்தப்பட்டாரா? என்பது பற்றி விசாரிக்கப்படலாம் என்கிறது போலீஸ் வட்டாரம். நயன்தாராவை அடுத்து த்ரிஷா, லட்சுமிராய், தற்போது கமலின் மகள் ஸ்ருதி வரை ஐ.பி.எல்.லுக்குள் அழைத்து வந்து வீரர்களோடு நட்பை உருவாக்கினார் குருநாத். இப்படி, தோனியின் நட்பைப் பெற்று அவரது காதலியாகவே மாறியவர் லட்சுமிராய். தற்போது கமலின் மகள் ஸ்ருதியை அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னாவின் "நட்பு' வளையத்துக்குள் நுழைத்தவரும் இந்த குருநாத் தான் என்கிறது சி.பி.சி.ஐ.டி. வட்டாரம். அதனால், ஐ.பி.எல்.லோடு சம்பந்தப்பட்டுள்ள இந்த நடிகைகள் கதிகலங்கியுள்ளனராம்.

-இளையசெல்வன்

ad

ad